» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அரசு கல்லூரிக்கு செல்ல கூடுதல் பேருந்து வசதி : மாணவிகள் கோரிக்கை!
திங்கள் 9, மார்ச் 2026 4:13:41 PM (IST)
சாத்தான்குளம் அரசு கல்லூரிக்கு செல்ல கூடுதல் பேருந்து இயக்க வேண்டும் என்று மாணவிகள் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், பெரியதாழையிலிருந்து சாத்தான்குளம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்குச் செல்ல கூடுதல் பேருந்து வசதி செய்து தரக்கோரி, அக்கிராமத்தைச் சேர்ந்த மாணவிகள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், பெரியதாழை கிராமத்தைச் சேர்ந்த 80-க்கும் மேற்பட்ட மாணவிகள் சாத்தான்குளம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயின்று வருகின்றனர். இம்மாணவிகள் கல்லூரிக்குச் செல்ல முறையான பேருந்து வசதி இல்லாததால் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
இதனால் சரியான நேரத்திற்கு கல்லூரிக்குச் செல்ல இயலாத நிலை நிலவுகிறது. தற்போது திருச்செந்தூரிலிருந்து படுக்கப்பத்து வழியாகச் செல்லும் 62B என்ற தடம் எண் கொண்ட அரசுப் பேருந்தை, காலை 7:30 மணி அளவில் பெரியதாழை கிராமத்திற்குள் வந்து மாணவிகளை ஏற்றிச் செல்லுமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
திங்கள் 9, மார்ச் 2026 5:39:37 PM (IST)

ஒரே கப்பலில் 147 காற்றாலை இறகுகள்: வ.உ.சி துறைமுகம் வரலாற்றுச் சாதனை!
திங்கள் 9, மார்ச் 2026 4:31:25 PM (IST)

விவசாயிகளிடம் ரூ.1.5 கோடி மோசடி: ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
திங்கள் 9, மார்ச் 2026 4:02:44 PM (IST)

தூத்துக்குடியில் கடலில் தவறி விழுந்து மீனவர் பலி
திங்கள் 9, மார்ச் 2026 3:29:07 PM (IST)

தூத்துக்குடி எண்ணெய் ஆலை வளாகத்தில் பயங்கர தீ விபத்து: தீயணைப்பு பணிகள் தீவிரம்
திங்கள் 9, மார்ச் 2026 12:57:56 PM (IST)

மக்காச்சோளத்திற்கு குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயம்: விவசாயிகள் சங்கம் கோரிக்கை!
திங்கள் 9, மார்ச் 2026 12:33:13 PM (IST)







