» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் கடலில் தவறி விழுந்து மீனவர் பலி
திங்கள் 9, மார்ச் 2026 3:29:07 PM (IST)
தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்றபோது எதிர்பாராத விதமாக கடலில் விழுந்த இளைஞர் உயிரிழந்துள்ளார்.
தூத்துக்குடி முத்தரையர் நகரைச் சேர்ந்த முருகன் மகன் மாயாண்டி (26). மீனவரான இவர் நேற்று சக மீனவர்கள் 4 பேருடன் திரேஸ்புரத்தில் இருந்து நாட்டுப் படகில் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். திரேஸ்புரத்தில் இருந்து கிழக்கே சுமார் 5 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, மாயாண்டி எதிர்பாராதவிதமாக கடலில் தவறி விழுந்துள்ளார்.
சக மீனவர்கள் அவரை உடனடியாக மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இருப்பினும், அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து தூத்துக்குடி மரைன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதி மீனவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
திங்கள் 9, மார்ச் 2026 5:39:37 PM (IST)

ஒரே கப்பலில் 147 காற்றாலை இறகுகள்: வ.உ.சி துறைமுகம் வரலாற்றுச் சாதனை!
திங்கள் 9, மார்ச் 2026 4:31:25 PM (IST)

அரசு கல்லூரிக்கு செல்ல கூடுதல் பேருந்து வசதி : மாணவிகள் கோரிக்கை!
திங்கள் 9, மார்ச் 2026 4:13:41 PM (IST)

விவசாயிகளிடம் ரூ.1.5 கோடி மோசடி: ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
திங்கள் 9, மார்ச் 2026 4:02:44 PM (IST)

தூத்துக்குடி எண்ணெய் ஆலை வளாகத்தில் பயங்கர தீ விபத்து: தீயணைப்பு பணிகள் தீவிரம்
திங்கள் 9, மார்ச் 2026 12:57:56 PM (IST)

மக்காச்சோளத்திற்கு குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயம்: விவசாயிகள் சங்கம் கோரிக்கை!
திங்கள் 9, மார்ச் 2026 12:33:13 PM (IST)







