» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மதிமுக மாநில நிர்வாகி அதிமுகவில் இணைந்தார்

திங்கள் 9, மார்ச் 2026 8:00:44 AM (IST)



மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில கலைத்துறை துணைச் செயலாளராகப் பணியாற்றி வந்த கோடையடி ராமச்சந்திரன், அக்கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்.

கோவில்பட்டியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அதிமுக கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் செ. ராஜூ எம்.எல்.ஏ. முன்னிலையில் அவர் தன்னை அதிமுகவில் இணைத்துக்கொண்டார். அவருக்கு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ கட்சித் துண்டு அணிவித்து வரவேற்பு அளித்தார்.

கட்சியிலிருந்து விலகியது குறித்துக் கோடையடி ராமச்சந்திரன் கூறுகையில், மதிமுகவின் தற்போதைய செயல்பாடுகளில் திருப்தி இல்லாததாலும், அதிமுகவின் மக்கள் நலப் பணிகளால் ஈர்க்கப்பட்டும் இந்த முடிவை எடுத்ததாகத் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் அதிமுக உள்ளூர் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital






Thoothukudi Business Directory