» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் ஒரே நாளில் 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது!
ஞாயிறு 8, மார்ச் 2026 9:41:54 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த ஐந்து நபர்கள், ஒரே நாளில் 'தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின்' கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில் தொடர்புடைய கோவில்பட்டியைச் சேர்ந்த அசோக் (எ) அய்யாதுரை (27) மற்றும் வேல்முருகன் (34) ஆகிய இருவர் மீதும்; ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தகராறு செய்து தாக்குதலில் ஈடுபட்ட வழக்கில் தொடர்புடைய ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த தண்டபாணி (23), மலையாண்டி (39) மற்றும் தங்கதுரை (எ) தங்கையா (22) ஆகிய மூவர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க அந்தந்த காவல் நிலைய ஆய்வாளர்கள் பரிந்துரை செய்தனர்.
காவல் ஆய்வாளர்களின் கோரிக்கையை ஏற்று, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சி. மதன், சம்பந்தப்பட்ட 5 பேர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சித் தலைவருக்குப் பரிந்துரை செய்தார்.
இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சித் தலைவரின் உத்தரவின் பேரில், நேற்று (07.03.2026) மேற்படி ஐந்து நபர்களும் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் பலத்த பாதுகாப்புடன் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
மாவட்டத்தின் அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பவர்கள் மீது இதுபோன்ற கடுமையான நடவடிக்கைகள் தொடரும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மண், மானம், மொழியைக் காக்க மீண்டும் திமுக ஆட்சி: தூத்துக்குடியில் அமைச்சர் கீதா ஜீவன் பிரசாரம்!
திங்கள் 13, ஏப்ரல் 2026 7:54:45 PM (IST)

லாரி மீது கார் மோதல்: தம்பதி உட்பட 4 பேர் பலி : குழந்தைகள் படுகாயம்!
திங்கள் 13, ஏப்ரல் 2026 5:43:00 PM (IST)

பனையூரில் 10,000 ஆண்டுகால காலப் பெட்டகம் என திகழும் புதைபடிவங்கள்: தொல்லியல் ஆர்வலர் தகவல்!
திங்கள் 13, ஏப்ரல் 2026 5:12:54 PM (IST)

தூத்துக்குடியில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் – ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்!
திங்கள் 13, ஏப்ரல் 2026 4:26:58 PM (IST)

நாசரேத் மனவளர்ச்சி குன்றியோர் இல்லத்தில் மனமகிழ்ச்சி விழா
திங்கள் 13, ஏப்ரல் 2026 4:20:23 PM (IST)

அம்பேத்கர் பிறந்தநாள்: ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் உறுதிமொழி ஏற்பு!
திங்கள் 13, ஏப்ரல் 2026 3:23:13 PM (IST)







