» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் லாரி ஷெட் உரிமையாளர் குத்திக் கொலை: போலீசார் விசாரணை!
ஞாயிறு 8, மார்ச் 2026 8:51:41 AM (IST)
தூத்துக்குடியில் லாரி ஷெட் உரிமையாளர் மதுபாட்டிலால் குத்திக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மச்சாது நகரைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (52). இவர் லாரி ஷெட் உரிமையாளராகத் தொழில் செய்து வந்தார். இவருக்கு முத்துலெட்சுமி என்ற மனைவியும், ராஜா, சுந்தர் ஆகிய இரு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை இரவு, தூத்துக்குடி 4-வது கேட் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது உறவினரைப் பார்ப்பதற்காக ஆறுமுகம் சென்றுள்ளார்.
அங்குச் சென்ற அவர், தனது மற்றொரு உறவினருடன் இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றுள்ளார். அவர்கள் இருவரும் தூத்துக்குடி ஆதிபராசக்தி நகர் மேற்குப் பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்குச் சென்று மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. அப்போது அவர்களுக்கு இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த அந்த உறவினர், அங்கிருந்த மதுபாட்டிலை உடைத்து ஆறுமுகத்தைக் குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
நேற்று காலை அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள், ரத்தக் காயங்களுடன் சடலம் கிடப்பதைக் கண்டு சிப்காட் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ஆறுமுகத்தின் சடலத்தைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவ இடத்தில் உடைந்த மதுபாட்டில்கள் சிதறிக் கிடந்தன. மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டன. இக்கொலை குறித்து சிப்காட் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள ஆறுமுகத்தின் உறவினரைப் பிடிக்கத் தனிப்படை அமைத்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விவசாயிகளிடம் ரூ.1.5 கோடி மோசடி: ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
திங்கள் 9, மார்ச் 2026 4:02:44 PM (IST)

தூத்துக்குடியில் கடலில் தவறி விழுந்து மீனவர் பலி
திங்கள் 9, மார்ச் 2026 3:29:07 PM (IST)

தூத்துக்குடி எண்ணெய் ஆலை வளாகத்தில் பயங்கர தீ விபத்து: தீயணைப்பு பணிகள் தீவிரம்
திங்கள் 9, மார்ச் 2026 12:57:56 PM (IST)

மக்காச்சோளத்திற்கு குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயம்: விவசாயிகள் சங்கம் கோரிக்கை!
திங்கள் 9, மார்ச் 2026 12:33:13 PM (IST)

தூத்துக்குடியில் உலக மகளிர் தின விழா: அமைச்சர் கீதா ஜீவன் விருது வழங்கினார்
திங்கள் 9, மார்ச் 2026 11:01:23 AM (IST)

எல்லோருக்கும் எல்லாம் என்பதே திராவிட மாடல் ஆட்சியின் நோக்கம்: அமைச்சர் கீதா ஜீவன்
திங்கள் 9, மார்ச் 2026 10:26:43 AM (IST)







