» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
முத்தாலங்குறிச்சி காமராஜ்-க்கு சமூக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தலைமைத்துவ விருது: ஆட்சியர் வழங்கினார்!
செவ்வாய் 3, மார்ச் 2026 8:37:02 PM (IST)

எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி எஸ்.காமராஜ்-க்கு 2025-26 ஆம் ஆண்டிற்கான சமூக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தலைமைத்துவ விருதினை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், வழங்கினார்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (03.03.2026), தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறையில் சிறப்பாக செயல்பட்டதற்காக முத்தாலங்குறிச்சி எஸ்.காமராஜ் என்பவருக்கு 2025-26 ஆம் ஆண்டிற்கான சமூக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தலைமைத்துவ விருதினை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், வழங்கினார்.
சமூக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தலைமைத்துவ விருது வழங்கும்பொருட்டு, மாநில அளவில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் மாநிலத் தேர்வுக்குழுவால் பரிசீலிக்கப்பட்டு, மாவட்ட வாரியாக விருது பெறுநர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக (KMTR) திருநெல்வேலி மண்டலத்தைச் சேர்ந்த தூத்துக்குடி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறையில் சிறப்பாக செயல்பட்டதற்காக முத்தாலங்குறிச்சி எஸ்.காமராஜ் 2025 - 26 ஆம் ஆண்டிற்கான சமூக பாதுகாப்பு தலைமைத்துவ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
இவ்விருதின் கீழ் ரூ.25,000 ரொக்கமாகவும், பாராட்டுச் சான்றிதழும் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், அவர்களால் அவருக்கு வழங்கப்பட்டது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் இயற்கை வளங்களின் நிலையான பயன்பாட்டை உறுதி செய்ய சமூக முன்னோடிகள் மேற்கொண்டு வரும் சேவைகளை பாராட்டும் நோக்கில் தமிழக அரசு ஆண்டுதோறும் இந்த விருதை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் இளையராஜா, உடனிருந்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விமான முன்பதிவு ஆளுமை மற்றும் கேபின் குழு பணியாளர் பயிற்சி: ஆட்சியர் அழைப்பு!
வியாழன் 5, மார்ச் 2026 5:26:55 PM (IST)

தாமிரபரணி அருகிலிருந்தும் குடிநீருக்குத் தவிப்பு: வசவப்பபுரம் கிராம மக்கள் திண்டாட்டம்!
வியாழன் 5, மார்ச் 2026 4:48:17 PM (IST)

பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் வேட்பாளராக அறிவிப்பு : தூத்துக்குடியில் உற்சாகக் கொண்டாட்டம்!
வியாழன் 5, மார்ச் 2026 3:49:06 PM (IST)

12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: ஆட்சியர் நேரில் ஆய்வு!
வியாழன் 5, மார்ச் 2026 12:52:23 PM (IST)

தூத்துக்குடியில் வருவாய்த்துறையினர் சாலை மறியல் போராட்டம்: 97 பேர் கைது!
வியாழன் 5, மார்ச் 2026 12:44:13 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 209 சப்-இன்ஸ்பெக்டர்களின் இடமாற்ற உத்தரவு ரத்து!
வியாழன் 5, மார்ச் 2026 8:41:05 AM (IST)









