» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் 102 பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்புத் திட்டம்: அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்தார்!
செவ்வாய் 3, மார்ச் 2026 11:58:07 AM (IST)

தூத்துக்குடியில் 102 குழந்தைகளுக்கு 'செல்வமகள் சேமிப்புத் திட்டத்தின்' கீழ் சேமிப்புக் கணக்குகளை அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்து, சேமிப்புப் புத்தகங்களை வழங்கினார்.
தூத்துக்குடி அஞ்சல் கோட்டம் சார்பில் பெண் குழந்தைகளின் எதிர்கால நலனைப் பாதுகாக்கும் வகையில், 102 குழந்தைகளுக்கு 'செல்வமகள் சேமிப்புத் திட்டத்தின்' (Sukanya Samriddhi Yojana) கீழ் சேமிப்புக் கணக்குகளை தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன் தொடங்கி வைத்து, 102 பயனாளி பெண் குழந்தைகளுக்குச் சேமிப்புப் புத்தகங்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் கீதா ஜீவன் பேசியதாவது: "தூத்துக்குடி அஞ்சல் கோட்டம் சார்பில் பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்காலத் தேவைகளைக் கருத்தில்கொண்டு இத்திட்டம் சிறப்பாகச் செயல்படுத்தப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக எனது தொகுதியில் உள்ள தாய்மார்களை இத்திட்டத்தில் இணைய ஊக்குவித்து வருகிறேன். அஞ்சல் நிலையங்களுக்குச் சென்று கணக்கு தொடங்க முடியாத தாய்மார்களுக்காக, அவர்களின் இருப்பிடத்திற்கு அருகிலேயே இத்தகைய சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக ரூ.250 செலுத்தி 102 பெண் குழந்தைகளுக்கு இன்று கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. தற்போது இத்திட்டத்திற்கு 8.2% வட்டி வழங்கப்படுகிறது. ஓராண்டில் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை சேமிக்கலாம். 18 வயது நிறைவடைந்த பின், உயர்கல்வி மற்றும் திருமணத் தேவைகளுக்காக இத்தொகையைப் பெற்றுக்கொள்ளலாம். ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 அரசால் வைப்பு செய்யப்படுகிறது.
இத்திட்டத்தில் சேர தாயின் வயது வரம்பு 40-லிருந்து 45 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆண்டு வருமான வரம்பு ரூ.72,000-லிருந்து ரூ.1,20,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.30 லட்சம் வரை மானியக் கடன் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு ரூ.37,000 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. "பெண் குழந்தைகளைப் பாரமாக எண்ணும் நிலை மாற வேண்டும்; பெண்களைக் கல்வியால் முன்னேற்றுவதே இந்த அரசின் நோக்கம்," என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் தூத்துக்குடி அஞ்சல் கோட்ட முழுநிலை கண்காணிப்பாளர் ஹேமாவதி, துணை கோட்ட ஆய்வாளர் மிகாநாயகம், மக்கள் தொடர்பு அலுவலர் பொன் ராம்குமார், மாநகரச் செயலாளர் எஸ்ஆர் ஆனந்த சேகரன், கலை இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன் ஜேக்கப், மாநகராட்சி கவுன்சிலர் சரவணகுமார், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விமான முன்பதிவு ஆளுமை மற்றும் கேபின் குழு பணியாளர் பயிற்சி: ஆட்சியர் அழைப்பு!
வியாழன் 5, மார்ச் 2026 5:26:55 PM (IST)

தாமிரபரணி அருகிலிருந்தும் குடிநீருக்குத் தவிப்பு: வசவப்பபுரம் கிராம மக்கள் திண்டாட்டம்!
வியாழன் 5, மார்ச் 2026 4:48:17 PM (IST)

பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் வேட்பாளராக அறிவிப்பு : தூத்துக்குடியில் உற்சாகக் கொண்டாட்டம்!
வியாழன் 5, மார்ச் 2026 3:49:06 PM (IST)

12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: ஆட்சியர் நேரில் ஆய்வு!
வியாழன் 5, மார்ச் 2026 12:52:23 PM (IST)

தூத்துக்குடியில் வருவாய்த்துறையினர் சாலை மறியல் போராட்டம்: 97 பேர் கைது!
வியாழன் 5, மார்ச் 2026 12:44:13 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 209 சப்-இன்ஸ்பெக்டர்களின் இடமாற்ற உத்தரவு ரத்து!
வியாழன் 5, மார்ச் 2026 8:41:05 AM (IST)