» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி அருகே விஏஓ வீட்டில் நகை திருட்டு: பெங்களூருவில் தந்தை, மகன் கைது

ஞாயிறு 1, மார்ச் 2026 9:13:53 AM (IST)

தூத்துக்குடி அருகே கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்ற தந்தை மற்றும் மகனைப் போலீசார் பெங்களூருவில் வைத்து கைது செய்தனர்.

தூத்துக்குடி அருகேயுள்ள புதுக்கோட்டை, சந்தோஷ் நகரைச் சேர்ந்தவர் மாரிமுத்து (44). இவர் ஓட்டப்பிடாரம் - தருவைகுளம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கவுசல்யா (37), திருநெல்வேலியில் பேராசிரியையாகப் பணியாற்றி வருகிறார்.

இவர்கள் கடந்த 14-ஆம் தேதி வெளியூருக்குச் சென்றுவிட்டு, 16-ஆம் தேதி வீடு திரும்பியுள்ளனர். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 12 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ. 15 லட்சம் எனப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து மாரிமுத்து அளித்த புகாரின் பேரில், புதுக்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். சம்பவ இடத்திலிருந்த சி.சி.டி.வி. கேமரா பதிவுகளின் அடிப்படையில் போலீசார் துப்பு துலக்கினர்.

விசாரணையில், கர்நாடக மாநிலம் உத்தரகள்ளியைச் சேர்ந்த அர்ஜூன் (56) மற்றும் அவரது மகன் மோகன்குமார் (22) ஆகியோர் வியாபாரிகள் போல் நோட்டமிட்டு இந்தத் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களது கைப்பேசி எண்களைச் சைபர் கிரைம் மூலம் ஆய்வு செய்ததில், இருவரும் பெங்களூருவில் பதுங்கியிருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, புதுக்கோட்டை போலீசார் பெங்களூரு விரைந்து சென்று தந்தை, மகன் இருவரையும் கைது செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital




Thoothukudi Business Directory