» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழா தேரோட்டம் கோலாகலம்

திங்கள் 2, மார்ச் 2026 3:37:15 PM (IST)



திருச்செந்தூரில், மாசித் திருவிழாவின் சிகர நிகழ்வான தேரோட்டம் இன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. நான்கு ரத வீதிகளிலும் திரண்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித்திருவிழா, கடந்த பிப்ரவரி 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது. விழாவின் ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலை வேளைகளில் சுவாமி மற்றும் அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, எட்டு வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். 

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருநாள் தேரோட்டம் இன்று (மார்ச் 2, 2026) கோலாகலமாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம் மற்றும் உதய மார்த்தாண்ட அபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. தேரோட்ட நிகழ்வில் முதலில் விநாயகர் தேர் ரத வீதிகளில் உலா வந்து நிலையை அடைந்தது. 

அதனைத் தொடர்ந்து, காலை 7.50 மணியளவில் சுவாமி தேர் நிலையிலிருந்து புறப்பட்டது. அரோகரா கோஷம் விண்ணதிர, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். 11-ம் திருநாளான நாளை இரவு தெப்பத் திருவிழாவும், 12-ம் திருநாளான மார்ச் 4-ஆம் தேதி மஞ்சள் நீராட்டு மற்றும் மலர் கேடய சப்பர வீதியுலாவுடன் இந்த ஆண்டுக்கான மாசித்திருவிழா நிறைவு பெறுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital








Thoothukudi Business Directory