» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கொலை முயற்சி, கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய இருவர் குண்டர் சட்டத்தில் கைது

திங்கள் 2, மார்ச் 2026 8:23:14 PM (IST)

தூத்துக்குடி மாநகரில் கொலை முயற்சி மற்றும் போதைப்பொருள் விற்பனை வழக்குகளில் தொடர்புடைய இருவரைத் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் (குண்டர் சட்டம்) கீழ் போலீஸார் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை முயற்சி வழக்கில், தூத்துக்குடியைச் சேர்ந்த சுந்தரபாண்டி (21) என்பவர் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். தருவைக்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் விற்பனைக்காகக் கஞ்சா வைத்திருந்த வழக்கில், தூத்துக்குடியைச் சேர்ந்த முருகன் (எ) கட்ட முருகன் (31) என்பவர் கைது செய்யப்பட்டார்.

இவர்களது தொடர் குற்றச் செயல்களைக் கருத்தில் கொண்டு, பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால், அவர்களைத் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் (1982) கீழ் சிறையிலடைக்கச் சிப்காட் மற்றும் தருவைக்குளம் காவல் நிலைய ஆய்வாளர்கள் பரிந்துரை செய்தனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி. மதன் பரிந்துரையை ஏற்று, மாவட்ட ஆட்சித் தலைவர் இளம்பகவத் இதற்கான உத்தரவைப் பிறப்பித்தார். இந்த உத்தரவின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட போலீசார் நேற்று சுந்தரபாண்டி மற்றும் கட்ட முருகன் ஆகிய இருவரையும் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital








Thoothukudi Business Directory