» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி தொகுதியை இரண்டாகப் பிரிக்க வேண்டும் : பரதர் குல அரசியல் உரிமை மீட்பு மாநாட்டில் தீர்மானம்
திங்கள் 2, மார்ச் 2026 3:13:50 PM (IST)

தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்று பரதர் குல அரசியல் உரிமை மீட்பு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தூத்துக்குடி பரதர் நலக் கூட்டமைப்பு சார்பில் "பரதர் குல அரசியல் உரிமை மீட்பு மாநாடு" பனிமய மாதா பேராலயம் முன்பாக நடைபெற்றது. தொழிலதிபர் சேசையா வில்லவராயர் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், தூத்துக்குடி, கன்னியாகுமாரி, ராமநாதபுரம் உள்ளிட்ட கடலோர மாவட்ட மீனவப் பிரதிநிதிகள் திரளாகக் கலந்துகொண்டனர்.
ராவ் பகதூர் குரூஸ் பர்னாந்து நற்பணி மன்றத் தலைவர் ஹெர்மன் கில்ட் வரவேற்புரையாற்ற, சமூகச் செயற்பாட்டாளர் ஜெரோன் குமார் சிறப்புரையாற்றினார். ஆலன் பரதர், ராஜா போஸ் ரீகன், இக்னேஷ், ராஜன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
இந்த மாநாட்டில், தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியை கிழக்கு மற்றும் மேற்கு என இரண்டாகப் பிரித்து மீனவ மக்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய வேண்டும்; மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் பரவர் சமூகத்திற்கு வாய்ப்பளிக்க வேண்டும்; மற்றும் திமுக, அதிமுக, தமிழக வெற்றிக் கழகம் போன்ற பிரதான கட்சிகள் கடலோரத் தொகுதிகளில் அச்சமூகத்தைச் சேர்ந்தவர்களையே வேட்பாளர்களாக நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 22 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், கடலில் உயிரிழந்த மீனவர் குடும்பங்களுக்கு ரூ. 20 லட்சம் நிவாரணமும், அரசுப் பணியில் 5% சிறப்பு ஒதுக்கீடும் வழங்கக் கோரிக்கை விடுக்கப்பட்டது. ராவ் பகதூர் குரூஸ் பர்னாந்து அவர்களுக்கு மணிமண்டபம் கட்டுவதுடன், மாநகராட்சி கட்டிடத்திற்கு அவர் பெயரையும், தூத்துக்குடி விமான நிலையத்திற்கு பாண்டியாபதி தேர்மாறன் பெயரையும் சூட்ட வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு மாநாட்டின் வாயிலாக வலியுறுத்தப்பட்டது. முடிவில் மருத்துவர் கவின் கார்ட்வின் நன்றி கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விமான முன்பதிவு ஆளுமை மற்றும் கேபின் குழு பணியாளர் பயிற்சி: ஆட்சியர் அழைப்பு!
வியாழன் 5, மார்ச் 2026 5:26:55 PM (IST)

தாமிரபரணி அருகிலிருந்தும் குடிநீருக்குத் தவிப்பு: வசவப்பபுரம் கிராம மக்கள் திண்டாட்டம்!
வியாழன் 5, மார்ச் 2026 4:48:17 PM (IST)

பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் வேட்பாளராக அறிவிப்பு : தூத்துக்குடியில் உற்சாகக் கொண்டாட்டம்!
வியாழன் 5, மார்ச் 2026 3:49:06 PM (IST)

12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: ஆட்சியர் நேரில் ஆய்வு!
வியாழன் 5, மார்ச் 2026 12:52:23 PM (IST)

தூத்துக்குடியில் வருவாய்த்துறையினர் சாலை மறியல் போராட்டம்: 97 பேர் கைது!
வியாழன் 5, மார்ச் 2026 12:44:13 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 209 சப்-இன்ஸ்பெக்டர்களின் இடமாற்ற உத்தரவு ரத்து!
வியாழன் 5, மார்ச் 2026 8:41:05 AM (IST)









