» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் மார்ச் 1 முதல் 15 வரை தாம்பரத்தில் நிறுத்தம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு!

வியாழன் 26, பிப்ரவரி 2026 10:56:40 AM (IST)

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடந்து வரும் பராமரிப்பு பணிகள் காரணமாக நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் மார்ச் 1 முதல் 15ம் தேதி வரை தாம்பரத்தில் நிறுத்தப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்து தென்னக ரயில்வேயின் அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 10 மற்றும் 11வது நடைமேடை பணிகள் காரணமாக, எழும்பூரில் ரயில் போக்குவரத்தில் நெருக்கடியை குறைக்கும் வகையில் மாற்றங்கள் செய் யப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை எழும்பூர் - செங்கோட்டை பொதிகை விரைவு ரயில் வண்டி எண்12661 மார்ச் 2ம் தேதியில் இருந்து 16ம் தேதி வரை சென்னை தாம்பரத்தில் இருந்து இரவு 8.05 மணிக்கு புறப்பட்டு செங்கோட்டை செல்லும்.

நெல்லை - சென்னை எழும்பூர் நெல்லை விரைவு ரயில் வண்டி எண் 12632 மார்ச் 1 முதல் 15ம் தேதி வரை தாம்பரத்துடன் நிறுத்தப்படும். எழும்பூர் செல்லாது. இந்த ரயில் காலை 6.25 மணிக்கு தாம்பரம் வந்தடையும். இதே போல சென்னை எழும்பூர் - திருச்சி சோழன் விரைவு ரயில் வண்டி எண் 22675 சென்னை எழும்பூரில் இருந்து வருகிற பிப்.28ம்தேதி முதல் மார்ச் 15ம் தேதி வரை சென்னை எழும்பூரில் இருந்து இரவு 8 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 2 மணி 15 நிமிடங்கள் தாமதமாக இரவு 10.15 மணிக்கு புறப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital




CSC Computer Education



Thoothukudi Business Directory