» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தை பார்வையிட்ட லசால் பள்ளி மாணவர்கள்!

வியாழன் 26, பிப்ரவரி 2026 8:40:27 PM (IST)


தூத்துக்குடி லசால் மேல்நிலைப்பள்ளியின் நீதி மற்றும் அமைதி குழு (Justice & Peace Club) சார்பாக, நீதிமன்ற நடைமுறைகளை நேரில் கண்டு அறிந்துகொள்வதற்காக 30 மாணவர்கள் அடங்கிய குழுவினர் இன்று தூத்துக்குடி ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றத்திற்கு வருகை தந்தனர்.

நீதிமன்றத்திற்கு வந்த மாணவர்கள், அங்குள்ள நீதித்துறை நடுவர் நீதிமன்றம்-1, நீதித்துறை நடுவர் நீதிமன்றம்-3 மற்றும் விரைவு நீதிமன்றம் ஆகியவற்றின் செயல்பாடுகளை நேரில் பார்வையிட்டனர். வழக்கு விசாரணைகள் நடைபெறும் விதம் மற்றும் சட்ட நடைமுறைகள் குறித்து  கேட்டறிந்தனர்.

நீதிமன்ற நடவடிக்கைகளைப் பார்வையிட்ட பிறகு, மாணவர்கள் சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களின் நீதிபதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடினர். அப்போது மாணவர்களின் சந்தேகங்களுக்கு நீதிபதிகள் விளக்கம் அளித்தனர்.

இந்த கல்விச் சுற்றுலாவுக்கான ஏற்பாடுகளை நீதிமன்ற அலுவலர்கள் மற்றும் நீதி மற்றும் அமைதி குழுவின் ஒருங்கிணைப்பாளர்களான ஆசிரியர்கள்  ஜெயக்குமார்,  ராமச்சந்திரன் ஆகியோர் செய்திருந்தனர். மாணவர்களுடன் ஆசிரியர்  ஜாய்சன் உடனிருந்தார்.

"நீதியும் அமைதியும் வகுப்பறையிலிருந்தே தொடங்க வேண்டும். எதிர்காலத்தில் நீதியையும் அமைதியையும் நிலைநாட்டுபவர்களாக நாம் திகழ வேண்டும்" என்று மாணவர்கள் இந்த வருகையின் நிறைவாகத் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education




Arputham Hospital





Thoothukudi Business Directory