» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் : ரூ.298.77 லட்சம் உபரி நிதி - அதிமுக வெளிநடப்பு

வியாழன் 26, பிப்ரவரி 2026 3:34:10 PM (IST)



தூத்துக்குடி மாநகராட்சி சாதாரண கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் ஜெகன் பெரியசாமி தலைமையில் ஆணையர் பிரியங்கா, துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலையில்  நடந்தது.

கூட்டம் தொடங்கியதும், தூத்துக்குடி மாநகராட்சியின் நடப்பு நிதி ஆண்டிற்கான (2026-2027) உத்தேச வரவு செலவு அறிக்கையை மேயர் தாக்கல் செய்தார். இந்த அறிக்கையின்படி, பல்வேறு வரி மற்றும் வரி அல்லாத இனங்கள் மூலமாக மொத்தம் ரூ. 17697.42 லட்சம் வருமானம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதில் முக்கிய வரவு இனங்களாக, சொத்துவரி மற்றும் இதர வரிகள் மூலம் ரூ. 3802.39 லட்சமும், முத்திரை கட்டணம் மற்றும் கேளிக்கை வரியாக ரூ. 600.00 லட்சமும் கணக்கிடப்பட்டுள்ளது. மேலும், அரசு மானியம் மற்றும் மாநில பகிர்மான நிதியாக ரூ. 7714.00 லட்சமும், 15-வது நிதிக்குழு மானியமாக ரூ. 1000.00 லட்சமும், ஏனைய வருமானங்கள் வாயிலாக ரூ. 4581.03 லட்சமும் வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதே காலகட்டத்திற்கான செலவினங்களைப் பொறுத்தவரை, மொத்தம் ரூ. 17398.65 லட்சம் செலவாகும் என உத்தேசமாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக பணியாளர்களின் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் தொடர்பான செலவினங்களுக்கு ரூ. 8276.75 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. சாலைகள், கட்டிடங்கள் மற்றும் இதர பராமரிப்பு உள்ளிட்ட இயக்க செலவினங்களுக்காக ரூ. 6824.00 லட்சமும், பொது நிதி பங்களிப்பிற்காக ரூ. 1200.00 லட்சமும் செலவிடப்பட உள்ளது. 

இவை தவிர, நிர்வாகச் செலவினங்களுக்கு ரூ. 817.25 லட்சமும், நிதி மற்றும் திட்டமிட்ட செலவினங்களுக்கு ரூ. 280.65 லட்சமும் செலவாகும் என கணிக்கப்பட்டுள்ளது. இவ்வாண்டின் ஒட்டுமொத்த வரவு மற்றும் செலவுகளை ஒப்பிடுகையில், நிர்வாகத்தில் ரூ. 298.77 லட்சம் உபரியாகக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சொத்து வரி மற்றும் இதர வரியிலா இனங்கள் மூலமாக ரூ. 3802.39 லட்சமும், முத்திரைக் கட்டணம் மற்றும் கேளிக்கை வரியாக ரூ. 600.00 லட்சமும் வருவாய் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அரசு மானியம் மற்றும் மாநில பகிர்மான நிதியாக ரூ. 7714.00 லட்சம், 15-வது நிதிக்குழு மானியமாக ரூ. 1000.00 லட்சம் மற்றும் ஏனைய வருமானங்கள் மூலமாக ரூ. 4581.03 லட்சம் என மொத்தம் ரூ. 17697.42 லட்சம் வருமானம் வரும் என கணக்கிடப்பட்டுள்ளது.

செலவினங்களைப் பொறுத்தவரை, நடப்பு நிதியாண்டில் ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான செலவுகளுக்கு ரூ. 8276.75 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. நிர்வாகச் செலவினங்களுக்கு ரூ. 817.25 லட்சமும், சாலைகள், கட்டிடங்கள் மற்றும் இதர பராமரிப்பு இயக்கச் செலவுகளுக்கு ரூ. 6824.00 லட்சமும் செலவிடப்பட உள்ளது. 

அத்துடன் நிதி மற்றும் திட்டமிட்ட செலவினங்களுக்கு ரூ. 280.65 லட்சமும், பொது நிதி பங்களிப்பிற்காக ரூ. 1200.00 லட்சமும் என மொத்தம் ரூ. 17398.65 லட்சம் செலவாகும் என உத்தேசமாகத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த நிதியாண்டின் இறுதியில் சுமார் ரூ. 298.77 லட்சம் உபரி வருமானம் கிடைக்கும் என மேயர் தனது உரையில் தெரிவித்தார். 

பட்ஜெட் தாக்கலைத் தொடர்ந்து, மாநகரின் ஒட்டுமொத்த வளர்ச்சி கருதி 45 புதிய அறிவிப்புகளை மேயர் வெளியிட்டார். குறிப்பாக, வி.வி.டி சிக்னல் முதல் 4-வது கேட் வரை சாலை அகலப்படுத்தப்பட்டு நடைபாதைகள் முறைப்படுத்தப்படும் எனத் தெரிவித்தார். 

மாநகரின் முக்கியப் பகுதிகளான ரஹ்மத் நகர், டூவிபுரம் 5-வது தெரு, பிரையண்ட் நகர் 1-வது தெரு, கடற்கரை சாலை மற்றும் பக்கிள் ஓடை அணுகு சாலை ஆகியவற்றில் மோட்டார் இல்லாத போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில் பிரத்யேக வழித்தடங்கள் அமைக்கப்படும் என்றும் கூறினார். 

மேலும், பொதுமக்களுக்கும் பாதசாரிகளுக்கும் இடையூறாக இருக்கும் சாலையோரக் கடைகளை ஒழுங்குபடுத்தி, விற்பனையாளர்களுக்கெனத் தனி விற்பனை மண்டலங்கள் உருவாக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

அதிமுக வெளிநடப்பு 



முன்னதாக மேயர் பட்ஜெட்டை வாசிக்கத் தொடங்கிய போதே அதிமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதிமுக கொறடா மந்திரமூர்த்தி எழுந்து, கடந்த ஐந்தாண்டு காலத்தில் மாநகராட்சியில் எந்தவொரு உருப்படியான வளர்ச்சிப் பணிகளும் நடைபெறவில்லை என்று கூறி முழக்கமிட்டார். அதனைத் தொடர்ந்து, திமுக அரசைக் கண்டிக்கும் வகையிலான துண்டுப் பிரசுரங்களை ஏந்தியபடி அதிமுக கவுன்சிலர்கள் வெற்றி செல்வன், ஜெயலட்சுமி, பத்மாவதி, ஜெயராணி உள்ளிட்டோர் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர். 

இக்கூட்டத்தில் உதவி ஆணையர் சரவணகுமார், மாநகரத் துணைப் பொறியாளர் சரவணன், சுகாதார அலுவலர் சரோஜா, மண்டலத் தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital


CSC Computer Education





Thoothukudi Business Directory