» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது!

வியாழன் 26, பிப்ரவரி 2026 9:16:08 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை மற்றும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இரண்டு வாலிபர்கள், தமிழக அரசின் தடுப்புக் காவல் சட்டத்தின் (குண்டர் சட்டம்) கீழ் இன்று கைது செய்யப்பட்டனர். 

தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சீனி முகம்மது நியாஸ் (19) மற்றும் ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சந்தோஷ்குமார் (19) ஆகிய இருவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க அந்தந்த காவல் நிலைய ஆய்வாளர்கள் பரிந்துரைத்தனர்.

இதனைத் தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி. மதன் பரிந்துரையை ஏற்று, மாவட்ட ஆட்சித் தலைவர் மேற்படி இருவரையும் தமிழ்நாடு தடுப்புக் காவல் சட்டத்தின் (1982) கீழ் ஓராண்டு சிறையில் அடைக்க உத்தரவிட்டார். 

இந்த உத்தரவின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீசார் இன்று (26.02.2026) இருவரையும் முறைப்படி கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். போதைப்பொருள் விற்பனை மூலம் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பவர்கள் மீது இத்தகைய கடுமையான சட்ட நடவடிக்கைகள் தொடரும் என மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education



Arputham Hospital





Thoothukudi Business Directory