» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பெண்ணிடம் 13 பவுன் நகைப்பறிப்பு: 3 மணி நேரத்தில் குற்றவாளிகளைப் பிடித்த தனிப்படை - எஸ்பி பாராட்டு!

புதன் 25, பிப்ரவரி 2026 11:26:48 AM (IST)

தூத்துக்குடி அருகே பெண்ணிடம் 13 பவுன் தங்க நகைகளைப் பறித்துச் சென்ற இருவரை, அடுத்த 3 மணி நேரத்திற்குள் காவல்துறையினர் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை நடுக்கூட்டுடன்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவரது மனைவி மந்திரமுத்து (57). இவர் சொக்கலிங்கபுரம் கிராமத்தில் புதிய வீடு கட்டி வருகிறார். நேற்று மதியம், தனது அண்ணன் கருப்பசாமியுடன் (66) மோட்டார் சைக்கிளில் கட்டுமானப் பணிகளைப் பார்வையிடச் சென்றார்.

உமரிக்கோட்டை சாலை பாலம் அருகே சென்றபோது, பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், மந்திரமுத்துவின் பைக் மீது மோதி அவர்களைக் கீழே தள்ளினர். பின்னர், மந்திரமுத்து கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தாலிச் சங்கிலி மற்றும் 6 பவுன் சங்கிலி என மொத்தம் 13 பவுன் நகைகளைப் பறித்துக்கொண்டு தப்பினர்.

இதன் மதிப்பு ரூ. 12 லட்சம் ஆகும். இது குறித்து மந்திரமுத்து அளித்த புகாரின் பேரில், தட்டப்பாறை இன்ஸ்பெக்டர் ஸ்டெல்லா பாய் வழக்குப்பதிவு செய்தார். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மதன் உத்தரவின் பேரில், ரூரல் டிஎஸ்பி சுதீர் ஆலோசனையின்படி தனிப்படை அமைக்கப்பட்டது.

சப்-இன்ஸ்பெக்டர் சுப்புராஜ் மற்றும் தனிப்படை காவலர் பொன்பாண்டி தலைமையிலான குழுவினர், அந்தச் சாலையில் உள்ள சிசிடிவி  கேமராக்களை ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில், நகைப் பறிப்பில் ஈடுபட்டவர்கள் மேலத்தட்டாப்பாறை கிராமத்தைச் சேர்ந்த ஹரி ராமதுரை மகன் தளவாய் ராஜ் (33) மற்றும் பேச்சிமுத்து மகன் முருகன் (33) என்பது உறுதியானது. உடனடியாக இருவரையும் கைது செய்த போலீஸார், அவர்களிடம் இருந்த 13 பவுன் நகைகளையும் மீட்டனர். 

இவர்கள் மீது வேறு ஏதேனும் வழக்குகள் நிலுவையில் உள்ளனவா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. சம்பவம் நடந்த 3 மணி நேரத்திற்குள் குற்றவாளிகளைக் கைது செய்த சப்-இன்ஸ்பெக்டர் சுப்புராஜ் மற்றும் தனிப்படை காவலர் பொன்பாண்டி ஆகியோரை எஸ்பி மதன் நேரில் அழைத்து வெகுவாகப் பாராட்டினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education



Arputham Hospital






Thoothukudi Business Directory