» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பாஜகவினருக்கு மேயர் மிரட்டல்? காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்!

புதன் 25, பிப்ரவரி 2026 10:41:59 AM (IST)



தூத்துக்குடியில், திமுக பொதுக்கூட்டத்தில் பாஜகவினரை மிரட்டும் வகையில் பேசியதாக, மேயர் ஜெகன் பெரியசாமி மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் கடந்த பிப். 22-ம் தேதி வி.வி.டி. சிக்னல் அருகே நடைபெற்ற திமுக கூட்டத்தில் மேயர் பேசிய பேச்சு, ஜனநாயக மரபுகளை மீறுவதாக பாஜக மாவட்டத் தலைவர் ஆர். சித்ராங்கதன் கண்டனம் தெரிவித்துள்ளார். அதிகாரப் பதவியில் இருப்பவர் பொது மேடையில் எதிர்க்கட்சியினரை அச்சுறுத்துவது சமூக நல்லிணக்கத்தைப் பாதிக்கும் என பாஜக தரப்பில் கூறப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், மேயர் ஜெகன் பெரியசாமி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரி, தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் பாரதிய ஜனதா கட்சியின் வழக்கறிஞர் பிரிவினர் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரில், "பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசியதற்காகச் சம்பந்தப்பட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்" எனக் கோரப்பட்டுள்ளது. அதிகார பலத்தைப் பயன்படுத்தி அரசியல் எதிரிகளை மிரட்டும் போக்கை ஏற்க முடியாது என்றும், காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education






Arputham Hospital



Thoothukudi Business Directory