» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பொது அமைதிக்கு பங்கம்: ஒரே நாளில் 5பேர் கைது!
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 9:08:45 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்களிடம் தகராறு செய்து, பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட 5 நபர்களைக் காவல்துறையினர் நேற்று ஒரே நாளில் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சி. மதன் உத்தரவின்படி, அனைத்து உட்கோட்டக் காவல் துணை கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் மாவட்ட முழுவதும் தீவிர ரோந்து மற்றும் பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், இந்த அதிரடி கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி நேற்று தூத்துக்குடி வடபாகம், தாளமுத்துநகர், ஆத்தூர், கோவில்பட்டி மேற்கு மற்றும் சாயர்புரம் ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக ஐந்து பேர் அடையாளம் காணப்பட்டனர். கைதானவர்கள் தூத்துக்குடியைச் சேர்ந்த ஜெபராஜ் (29), அருள்ராஜ் (22), தங்கராஜ் (25), சங்கரேஸ்வரன் (எ) சங்கரலிங்கம் (45) மற்றும் சரவணகுமார் (25) என்பது தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட இந்த 5 நபர்கள் மீதும் அந்தந்தப் பகுதி காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பிடிபட்ட இவர்கள் 5 பேர் மீதும் ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. பொதுமக்கள் நலன் கருதி இத்தகைய சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: ஆட்சியர் நேரில் ஆய்வு!
வியாழன் 5, மார்ச் 2026 12:52:23 PM (IST)

தூத்துக்குடியில் வருவாய்த்துறையினர் சாலை மறியல் போராட்டம்: 97 பேர் கைது!
வியாழன் 5, மார்ச் 2026 12:44:13 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 209 சப்-இன்ஸ்பெக்டர்களின் இடமாற்ற உத்தரவு ரத்து!
வியாழன் 5, மார்ச் 2026 8:41:05 AM (IST)

டிசிடபிள்யூ நிறுவனத்தில் 55-வது தேசிய பாதுகாப்பு தின விழா
வியாழன் 5, மார்ச் 2026 8:07:30 AM (IST)

திருச்செந்தூர் அவதார பதியில் அய்யா வைகுண்டரின் 194-வது அவதார தின விழா கோலாகலம்!
வியாழன் 5, மார்ச் 2026 8:00:43 AM (IST)

காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்: எஸ்பி மதன் நேரடி விசாரணை
புதன் 4, மார்ச் 2026 8:14:22 PM (IST)









