» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மெட்டில்பட்டி அரசுப் பள்ளியில் வானவியல் பயிற்சி : மாணவர்கள் ஆர்வம்
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 4:47:38 PM (IST)

மெட்டில்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு டெலஸ்கோப் மூலம் வான்பொருட்களைப் பார்வையிடுவது குறித்த சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் மெட்டில்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், மாவட்ட அஸ்ட்ரோ கிளப் சார்பில் மாணவர்களுக்கு வானவியல் விழிப்புணர்வு மற்றும் டெலஸ்கோப் பயிற்சி அளிக்கப்பட்டது. தலைமை ஆசிரியர் காந்திராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அஸ்ட்ரோ கிளப் செயலாளர் முத்துமுருகன் கலந்துகொண்டு டெலஸ்கோப்பை கையாளும் முறை மற்றும் தொலைதூரப் பொருட்களைப் பார்வையிடுதல் குறித்துப் பயிற்சி அளித்தார்.
இதில் பங்கேற்ற மாணவர்களுக்கு 'நிறமாலை' விழிப்புணர்வு அட்டைகள் மற்றும் வானவியல் காலண்டர்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் ஆசிரியர்கள் சாந்தி, நாகலட்சுமி, ஜெயா மேரி உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி மூலம் இத்தகைய பயிற்சிகள் மாநிலம் முழுவதும் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விமான முன்பதிவு ஆளுமை மற்றும் கேபின் குழு பணியாளர் பயிற்சி: ஆட்சியர் அழைப்பு!
வியாழன் 5, மார்ச் 2026 5:26:55 PM (IST)

தாமிரபரணி அருகிலிருந்தும் குடிநீருக்குத் தவிப்பு: வசவப்பபுரம் கிராம மக்கள் திண்டாட்டம்!
வியாழன் 5, மார்ச் 2026 4:48:17 PM (IST)

பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் வேட்பாளராக அறிவிப்பு : தூத்துக்குடியில் உற்சாகக் கொண்டாட்டம்!
வியாழன் 5, மார்ச் 2026 3:49:06 PM (IST)

12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: ஆட்சியர் நேரில் ஆய்வு!
வியாழன் 5, மார்ச் 2026 12:52:23 PM (IST)

தூத்துக்குடியில் வருவாய்த்துறையினர் சாலை மறியல் போராட்டம்: 97 பேர் கைது!
வியாழன் 5, மார்ச் 2026 12:44:13 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 209 சப்-இன்ஸ்பெக்டர்களின் இடமாற்ற உத்தரவு ரத்து!
வியாழன் 5, மார்ச் 2026 8:41:05 AM (IST)









