» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் 90-வது ஆண்டு விழா: இலவச மருத்துவ முகாம்
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 3:27:44 PM (IST)

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் 90-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, தூத்துக்குடியில் வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் 90-வது ஆண்டு தினம் இன்று நாடு முழுவதும் உள்ள கிளைகளில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி சிதம்பர நகரில் அமைந்துள்ள ஐ.ஓ.பி கிளை அலுவலகத்தில் விழா நடைபெற்றது.
1937-ம் ஆண்டு இந்த வங்கியைத் தோற்றுவித்த வங்கியின் நிறுவனர் எம்.சி.டி.எம். சிதம்பரம் செட்டியார் உருவப்படத்திற்கு, வங்கியின் மண்டல மேலாளர் லட்சுமி நரசிம்மன் மற்றும் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெபமணி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
ஆண்டு விழாவை முன்னிட்டு வங்கி நிர்வாகம் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்குக் கண் பரிசோதனைகள் செய்யப்பட்டன. ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் கண்டறியும் சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.இந்த முகாமில் ஏராளமான வாடிக்கையாளர்கள் மற்றும் வங்கி ஊழியர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விமான முன்பதிவு ஆளுமை மற்றும் கேபின் குழு பணியாளர் பயிற்சி: ஆட்சியர் அழைப்பு!
வியாழன் 5, மார்ச் 2026 5:26:55 PM (IST)

தாமிரபரணி அருகிலிருந்தும் குடிநீருக்குத் தவிப்பு: வசவப்பபுரம் கிராம மக்கள் திண்டாட்டம்!
வியாழன் 5, மார்ச் 2026 4:48:17 PM (IST)

பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் வேட்பாளராக அறிவிப்பு : தூத்துக்குடியில் உற்சாகக் கொண்டாட்டம்!
வியாழன் 5, மார்ச் 2026 3:49:06 PM (IST)

12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: ஆட்சியர் நேரில் ஆய்வு!
வியாழன் 5, மார்ச் 2026 12:52:23 PM (IST)

தூத்துக்குடியில் வருவாய்த்துறையினர் சாலை மறியல் போராட்டம்: 97 பேர் கைது!
வியாழன் 5, மார்ச் 2026 12:44:13 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 209 சப்-இன்ஸ்பெக்டர்களின் இடமாற்ற உத்தரவு ரத்து!
வியாழன் 5, மார்ச் 2026 8:41:05 AM (IST)









