» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: நிபுணர்கள் தீவிர சோதனை
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 3:09:03 PM (IST)
தூத்துக்குடி நீதிமன்ற வளாகத்தில் 12 இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் சமீபகாலமாக பள்ளிகள், விமான நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி வாயிலாக வெடிகுண்டு மிரட்டல்கள் வருவது தொடர்கதையாகி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு விருதுநகர் நீதிமன்றத்தில் மர்மப் பொருள் வெடித்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்தச் சூழலில், இன்று முற்பகல் தூத்துக்குடி நீதிமன்றத்திற்கு மர்ம நபர் ஒருவர் மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், மதியம் 12:20 மணி அளவில் நீதிமன்ற வளாகத்தின் 12 வெவ்வேறு இடங்களில் வெடிகுண்டுகள் வெடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மிரட்டல் குறித்து நீதிமன்ற ஊழியர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர். இதனைத் தொடர்ந்து வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் படை பிரிவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். நீதிமன்ற வளாகம் முழுவதும் மற்றும் நீதிபதிகள் குடியிருப்புகளில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.
நீதிமன்றப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. நீண்ட நேர சோதனைக்குப் பிறகு, சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எதுவும் கண்டறியப்படவில்லை. இதனால் இந்த மிரட்டல் வெறும் புரளி என்பது உறுதி செய்யப்பட்டது. இருப்பினும், மின்னஞ்சல் அனுப்பிய மர்ம நபரை சைபர் க்ரைம் போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விமான முன்பதிவு ஆளுமை மற்றும் கேபின் குழு பணியாளர் பயிற்சி: ஆட்சியர் அழைப்பு!
வியாழன் 5, மார்ச் 2026 5:26:55 PM (IST)

தாமிரபரணி அருகிலிருந்தும் குடிநீருக்குத் தவிப்பு: வசவப்பபுரம் கிராம மக்கள் திண்டாட்டம்!
வியாழன் 5, மார்ச் 2026 4:48:17 PM (IST)

பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் வேட்பாளராக அறிவிப்பு : தூத்துக்குடியில் உற்சாகக் கொண்டாட்டம்!
வியாழன் 5, மார்ச் 2026 3:49:06 PM (IST)

12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: ஆட்சியர் நேரில் ஆய்வு!
வியாழன் 5, மார்ச் 2026 12:52:23 PM (IST)

தூத்துக்குடியில் வருவாய்த்துறையினர் சாலை மறியல் போராட்டம்: 97 பேர் கைது!
வியாழன் 5, மார்ச் 2026 12:44:13 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 209 சப்-இன்ஸ்பெக்டர்களின் இடமாற்ற உத்தரவு ரத்து!
வியாழன் 5, மார்ச் 2026 8:41:05 AM (IST)









