» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பெண்ணை தாக்கி கொலை செய்த வழக்கில் 2பேர் கைது!
வெள்ளி 6, பிப்ரவரி 2026 8:31:33 PM (IST)
கோவில்பட்டியில் கடந்த 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு கொலை வழக்கில், 8 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றவாளிகளை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இலுப்பையூரணி பகுதியில் கடந்த 30.09.2018 அன்று 48 வயது பெண்ணை தாக்கி கொலை செய்த சம்பவத்தில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேற்படி வழக்கின் விசாரணையை தீவிரப்படுத்தி எதிரிகளை கண்டுபித்து கைது செய்ய தனிப்படை அமைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை. சிலம்பரசன் உத்தரவிட்டார். அவரது உத்தரவின்படி கோவில்பட்டி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ஜெகநாதன் தலைமையிலான தனிப்படை போலீசார் தொடர்ந்து வழக்கு குறித்த சாட்சியங்களை சேகரித்தனர்.
மேலும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ரீதியாகவும் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி கொலை சம்பவத்தில் ஈடுபட்டது கோவில்பட்டியை சேர்ந்த டேவிட் ராஜ் 20/18 (28/26), அப்போது இளஞ்சிறாராக இருந்த ஒருவர் ஆகியோர் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து மேற்படி குற்றவாளிகளை கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையிலடைத்தனர்.
மேற்படி கொலை வழக்கு 8 வருடங்களாக விசாரணையில் இருந்து வந்த நிலையில் சம்பந்தப்பட்ட எதிரிகளில் ஒருவரை கைது செய்தும் ஒருவரை கையகபடுத்தியும் சிறப்பாக பணிபுரிந்த கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் சண்முகம் மற்றும் காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை. சிலம்பரசன் வெகுவாக பாராட்டினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

யுத்த வெறி பிடித்த அமெரிக்கா, இஸ்ரேலைக் கண்டித்து தூத்துக்குடியில் தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
வியாழன் 5, மார்ச் 2026 8:15:26 PM (IST)

விமான முன்பதிவு ஆளுமை மற்றும் கேபின் குழு பணியாளர் பயிற்சி: ஆட்சியர் அழைப்பு!
வியாழன் 5, மார்ச் 2026 5:26:55 PM (IST)

தாமிரபரணி அருகிலிருந்தும் குடிநீருக்குத் தவிப்பு: வசவப்பபுரம் கிராம மக்கள் திண்டாட்டம்!
வியாழன் 5, மார்ச் 2026 4:48:17 PM (IST)

பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் வேட்பாளராக அறிவிப்பு : தூத்துக்குடியில் உற்சாகக் கொண்டாட்டம்!
வியாழன் 5, மார்ச் 2026 3:49:06 PM (IST)

12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: ஆட்சியர் நேரில் ஆய்வு!
வியாழன் 5, மார்ச் 2026 12:52:23 PM (IST)

தூத்துக்குடியில் வருவாய்த்துறையினர் சாலை மறியல் போராட்டம்: 97 பேர் கைது!
வியாழன் 5, மார்ச் 2026 12:44:13 PM (IST)









