» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அம்பையில் புற்றுநோய் கண்டறியும் மருத்துவ முகாம்!
வெள்ளி 6, பிப்ரவரி 2026 8:10:18 PM (IST)

தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுக ஆணையம், கிரியோயிட் அறக்கட்டளை, நெல்லை கேன்சர் கேர் சென்டர், உதவும் உள்ளங்கள் மற்றும் லவ்லி பிரண்ட்ஸ் அறக்கட்டளை ஆகியவை இணைந்து நடத்திய இலவச புற்றுநோய் கண்டறியும் மருத்துவ முகாம் இன்று அம்பாசமுத்திரம் ஹாலில் நடைபெற்றது.
காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடைபெற்ற இந்த முகாமிற்கு அம்பாசமுத்திரம் நகராட்சி துணைத்தலைவர் ஆ. சிவசுப்பிரமணியன் தலைமை வகித்தார். லவ்லி பிரண்ட்ஸ் அறக்கட்டளை தலைவர் எம். ஜெகதீசன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். நகராட்சி ஆணையர் ஆர். ராஜேஸ்வரன், கவுன்சிலர்கள் எஸ். பேச்சியம்மாள் (11-வது வார்டு), எஸ். பேச்சி கனியம்மாள் (13-வது வார்டு) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். ராமசுப்பு மருத்துவ முகாமினைத் துவக்கி வைத்துப் பேசுகையில்: "தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் பீடி தொழில் காரணமாக புற்றுநோய் பாதிப்பு அதிக அளவில் உள்ளது. இதற்கு மாற்றாக தையல் பயிற்சி போன்ற வாழ்வாதாரத் திட்டங்களையும், இது போன்ற கண்டறியும் முகாம்களையும் வ.உ.சி துறைமுக ஆணையமும் கிரியோயிட் அறக்கட்டளையும் முன்னெடுப்பது பாராட்டுக்குரியது" என்றார்.
முன்னாள் கப்பல் துறை ஆலோசனைக் குழு உறுப்பினர் டாக்டர் அமீர்கான் திட்ட விளக்க உரையாற்றினார். தென்காசி மாவட்ட முஸ்லீம் பெண்கள் உதவும் சங்க செயலாளர் ஹாஜி மொ. முகம்மது ஸலீம் உள்ளிட்டோர் உரையாற்றினர். டாக்டர் சந்திரலேகா தலைமையில் தங்கம்மாள், நந்தினி, சரன்யா, கார்த்திக் ஆகியோர் அடங்கிய குழுவினர் பரிசோதனைகளை மேற்கொண்டனர். சுமார் ₹6,000 மதிப்பிலான புற்றுநோய் பரிசோதனைகள் 60 நபர்களுக்கு முற்றிலும் இலவசமாக செய்யப்பட்டது.
முன்னாள் நகராட்சி துணைத்தலைவர் அந்தோணி சாமி, கிரியோயிட் அறக்கட்டளை அறங்காவலர் பாத்திமா அமீர்கான், அப்துல் ரஹீம், எஸ். கோபால், எஸ். முத்துசாமி, சம்சுதீன், நஜிமுதீன், ஏ. நடராஜன், எஸ். ஆறுமுகம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.நிகழ்ச்சியை லவ்லி பிரண்ட்ஸ் துணை செயலாளர் சி. மகேஷ் தொகுத்து வழங்கினார். முகாம் ஒருங்கிணைப்பாளர் ஜி. சிவகுருநாதன் நன்றியுரை ஆற்றினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விமான முன்பதிவு ஆளுமை மற்றும் கேபின் குழு பணியாளர் பயிற்சி: ஆட்சியர் அழைப்பு!
வியாழன் 5, மார்ச் 2026 5:26:55 PM (IST)

தாமிரபரணி அருகிலிருந்தும் குடிநீருக்குத் தவிப்பு: வசவப்பபுரம் கிராம மக்கள் திண்டாட்டம்!
வியாழன் 5, மார்ச் 2026 4:48:17 PM (IST)

பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் வேட்பாளராக அறிவிப்பு : தூத்துக்குடியில் உற்சாகக் கொண்டாட்டம்!
வியாழன் 5, மார்ச் 2026 3:49:06 PM (IST)

12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: ஆட்சியர் நேரில் ஆய்வு!
வியாழன் 5, மார்ச் 2026 12:52:23 PM (IST)

தூத்துக்குடியில் வருவாய்த்துறையினர் சாலை மறியல் போராட்டம்: 97 பேர் கைது!
வியாழன் 5, மார்ச் 2026 12:44:13 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 209 சப்-இன்ஸ்பெக்டர்களின் இடமாற்ற உத்தரவு ரத்து!
வியாழன் 5, மார்ச் 2026 8:41:05 AM (IST)









