» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3பேர் கைது : பைக் பறிமுதல்!

வெள்ளி 16, ஜனவரி 2026 8:50:07 PM (IST)

ஆறுமுகநேரி பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் காவல் ஆய்வாளர்  திலிபன் தலைமையில் சார்பு ஆய்வாளர்  ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது காயல்பட்டினம் பகுதியில் ஒரு பள்ளி அருகே சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்தனர்.

அதில் அவர்கள் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த உண்ணாமலை (28) மற்றும் ஆறுமுகநேரியை சேர்ந்தவர்களான அண்ணாமலை காஜன் (25), முகேஷ் (18) ஆகியோர் என்பதும்  விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து ஆறுமுகநேரி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவுசெய்து 3பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து கஞ்சா மற்றும் ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital






Thoothukudi Business Directory