» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் ரூ.1.54 லட்சம் பறிமுதல்: பறக்கும் படையினர் அதிரடி நடவடிக்கை
செவ்வாய் 17, மார்ச் 2026 3:23:13 PM (IST)

தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் பறக்கும் படையினர் மேற்கொண்ட வாகன சோதனையில், ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.1.54 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் கூட்டுறவுத் துறை துணைப் பதிவாளர் பொன்மாரி தலைமையிலான பறக்கும் படையினரும், காவல்துறையினரும் இணைந்து இன்று தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த தூத்துக்குடியைச் சேர்ந்த நடராஜன் என்பவரை நிறுத்திச் சோதனையிட்டனர்.
அவரது வாகனத்தில் ரூ.1,54,300 இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால், பணத்திற்கான முறையான ஆவணங்கள் இல்லாத காரணத்தினால், அந்தத் தொகையை அதிகாரிகள் உடனடியாகப் பறிமுதல் செய்து தூத்துக்குடி தாலுகா தலைமையிடத்து துணை வட்டாட்சியர் பாலமுருகனிடம் ஒப்படைத்தனர். தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி, உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே இந்தப் பணம் திரும்ப ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

முதியோர், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு: ஆட்சியர் இளம்பகவத் அறிவிப்பு
புதன் 18, மார்ச் 2026 8:41:29 AM (IST)

பட்டினமருதூரில் அகழாய்வு பணிகள் விறுவிறுப்பு!
புதன் 18, மார்ச் 2026 8:32:04 AM (IST)

பாலக்காடு - திருச்செந்தூர் ரயில் சேவையில் மாற்றம்: இன்று முதல் மாற்றுப்பாதையில் இயக்கம்!
புதன் 18, மார்ச் 2026 8:19:06 AM (IST)

கோவில்பட்டியில் இடி, மின்னலுடன் பலத்த மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி !
புதன் 18, மார்ச் 2026 8:15:42 AM (IST)

பாஜக தலைமை அனுமதித்தால் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டி: தமிழிசை பேட்டி
புதன் 18, மார்ச் 2026 8:06:29 AM (IST)

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் முன் ரீல்ஸ் எடுத்த இளம்பெண்கள் மீது புகார் - போலீசார் விசாரணை
புதன் 18, மார்ச் 2026 7:58:59 AM (IST)









கீதாMar 17, 2026 - 07:57:06 PM | Posted IP 162.1*****