» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பாஜக தலைமை அனுமதித்தால் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டி: தமிழிசை பேட்டி

புதன் 18, மார்ச் 2026 8:06:29 AM (IST)

கட்சித் தலைமை முடிவு செய்தால் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடத் தயாராக இருப்பதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தமிழிசை சௌந்தரராஜன் கூறியதாவது: "திருமாவளவன் போன்ற தலைவர்கள், நாங்கள் கூட்டணிக்காக மற்றவர்களுக்கு நெருக்கடி கொடுப்பதாகக் கூறுகின்றனர். ஆனால், பாஜக சார்பில் கூட்டணி குறித்து யாருக்கும் எந்தவித நெருக்கடியும் கொடுக்கப்படவில்லை. தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் மதவாதம் மற்றும் மதக்கலவரங்கள் ஏற்படும் எனத் திட்டமிட்டுப் பொய்யான குற்றச்சாட்டுகளைப் பரப்பி வருகின்றனர்."

"வருகிற 19-ஆம் தேதி பாஜகவின் தேர்தல் அறிக்கை கட்சித் தலைமையிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது. அதன் பிறகு முறைப்படி தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். கட்சித் தலைமை விரும்பினால், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் நான் போட்டியிடுவேன்," என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital




Thoothukudi Business Directory