» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் 24 மணி நேர தேர்தல் கட்டுப்பாட்டு அறை : ஆட்சியர் இளம்பகவத் நேரில் ஆய்வு
செவ்வாய் 17, மார்ச் 2026 3:40:32 PM (IST)

தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் 24 மணி நேர தேர்தல் கட்டுப்பாட்டு அறையை மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத் நேரில் ஆய்வு செய்தார்.
2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் ஏப்ரல் 23 அன்று நடைபெறவுள்ளதை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் தேர்தல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பறக்கும் படைகள் மற்றும் கண்காணிப்புக் குழுக்களின் செயல்பாடுகளையும் மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான க. இளம்பகவத் இன்று (மார்ச் 17, 2026) நேரில் ஆய்வு செய்தார்.
தேர்தல் தொடர்பான புகார்களைப் பெறவும், தேர்தல் நடத்தை விதிமீறல்களைக் கண்காணிக்கவும் இந்த அறை 24 மணி நேரமும் சுழற்சி முறையில் இயங்கி வருகிறது. பொதுமக்களிடம் இருந்து வரும் தொலைபேசி அழைப்புகள் மற்றும் புகார்கள் எவ்வாறு பதிவு செய்யப்படுகின்றன என்பது குறித்து ஆட்சியர் கேட்டறிந்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

முதியோர், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு: ஆட்சியர் இளம்பகவத் அறிவிப்பு
புதன் 18, மார்ச் 2026 8:41:29 AM (IST)

பட்டினமருதூரில் அகழாய்வு பணிகள் விறுவிறுப்பு!
புதன் 18, மார்ச் 2026 8:32:04 AM (IST)

பாலக்காடு - திருச்செந்தூர் ரயில் சேவையில் மாற்றம்: இன்று முதல் மாற்றுப்பாதையில் இயக்கம்!
புதன் 18, மார்ச் 2026 8:19:06 AM (IST)

கோவில்பட்டியில் இடி, மின்னலுடன் பலத்த மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி !
புதன் 18, மார்ச் 2026 8:15:42 AM (IST)

பாஜக தலைமை அனுமதித்தால் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டி: தமிழிசை பேட்டி
புதன் 18, மார்ச் 2026 8:06:29 AM (IST)

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் முன் ரீல்ஸ் எடுத்த இளம்பெண்கள் மீது புகார் - போலீசார் விசாரணை
புதன் 18, மார்ச் 2026 7:58:59 AM (IST)








