» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அரிவாளை வைத்து தகராறில் ஈடுபட்ட 2 ரவுடிகள் கைது
வெள்ளி 16, ஜனவரி 2026 8:48:00 PM (IST)
சாத்தான்குளம் மற்றும் கயத்தாறு ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அரிவாளை வைத்து தகராறில் ஈடுபட்ட 2 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்டீபன் தலைமையிலான போலீசார் நேற்று பேய்குளம் பஜார் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது அங்கு பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் கையில் அரிவாளுடன் நின்று கொண்டிருந்த தூத்துக்குடியைச் சேர்ந்த ராஜா சிங் (42) என்பவரை மேற்படி போலீசார் கைது செய்து அரிவாளை பறிமுதல் செய்தனர்.
அதேபோன்று கயத்தாறு காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தகுமார் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்ட போது கயத்தாறு செட்டிகுறிச்சி பகுதியில் அரிவாளுடன் நின்று கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த செல்லத்துரை (51) என்பவரை போலீசார் கைது செய்து அரிவாளை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து சாத்தான்குளம் மற்றும் கயத்தாறு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ராஜாசிங் மீது ஏற்கனவே தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களிலும், செல்லதுரை மீது தூத்துக்குடி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களிலும் பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாணவி கொலை: குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி செல்போன் கடைகள் அடைப்பு
செவ்வாய் 17, மார்ச் 2026 9:17:38 PM (IST)

வீட்டிற்குள் புகுந்த 4 அடி நீள பச்சைப் பாம்பு மீட்பு
செவ்வாய் 17, மார்ச் 2026 9:15:28 PM (IST)

சட்டமன்றத் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சார வாகனம் : ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்!
செவ்வாய் 17, மார்ச் 2026 3:46:41 PM (IST)

தூத்துக்குடியில் 24 மணி நேர தேர்தல் கட்டுப்பாட்டு அறை : ஆட்சியர் இளம்பகவத் நேரில் ஆய்வு
செவ்வாய் 17, மார்ச் 2026 3:40:32 PM (IST)

தூத்துக்குடியில் ரூ.1.54 லட்சம் பறிமுதல்: பறக்கும் படையினர் அதிரடி நடவடிக்கை
செவ்வாய் 17, மார்ச் 2026 3:23:13 PM (IST)

காங்கிரஸ் கமிட்டி சார்பில் வேட்பாளர் நேர்காணல்!
செவ்வாய் 17, மார்ச் 2026 3:17:19 PM (IST)








