» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நிறுத்தம்: பாஜக நன்றி

வெள்ளி 16, ஜனவரி 2026 8:42:59 PM (IST)


தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வேண்டும் என மத்திய ரயில்வே அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். 

வர்த்தக நகரமான தூத்துக்குடியில் உள்ள பழைய பேருந்து நிலையம் மற்றும் புதிய பேருந்து நிலையம் ஆகிய இரண்டையும் இணைக்கும் வகையில் புதிதாக அமைக்கப்பட்ட மேலூர் ரயில் நிலையத்திற்கு வரும் அனைத்து ரயில்களும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நின்று செல்ல வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி, தெற்கு மாவட்ட  தலைவர் சித்ராங்கதன் சார்பில் மத்திய தகவல் ஒளிபரப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர்  எல்.முருகனிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த கோரிக்கையை ஏற்று, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டது. அதன் அடிப்படையில், தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வேண்டும் என மத்திய ரயில்வே அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். 

இதன் மூலம் பொதுமக்கள், வணிகர்கள், தொழிலாளர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பெரிதும் பயன்பெறுவார்கள்.  இந்த மக்கள்நல முடிவை எடுத்த மத்திய ரயில்வே அமைச்சர்  அஸ்வினி வைஷ்ணவ் அவர்களுக்கும், பரிந்துரை செய்த மத்திய இணையமைச்சர்  டாக்டர் எல்.முருகன் அவர்களுக்கும் தூத்துக்குடி பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்தனர்.


மக்கள் கருத்து

BabuJan 18, 2026 - 09:34:02 AM | Posted IP 162.1*****

extra oru trin vidunga

மக்கள்Jan 17, 2026 - 12:42:26 PM | Posted IP 162.1*****

என்று முதல் நின்று செல்லும் தேதி நேரம் குறிப்பிட்டால் இன்றே சென்று ஏறிக்கொள்வோம்

TVK.Jan 17, 2026 - 10:43:54 AM | Posted IP 162.1*****

வாழ்த்துக்கள்

இவன்Jan 17, 2026 - 07:45:05 AM | Posted IP 104.2*****

மத்திய அரசுக்கு வாழ்த்துக்கள், இனி ஸ்டிக்கர் ஒட்ட கண்ணுமுழி ஆதரவாளர்கள் எல்லாம் வரும்.

S. Murugaraj.Jan 16, 2026 - 09:17:02 PM | Posted IP 172.7*****

கீலூர் நிலையத்தில் இருந்து புறப்பட்டு செல்லும் ரயில். மேலுரில் அணைத்து ரெயில்களும் நிற்குமா.. அல்லது மேற்கில் இருந்து வரும் அணைத்து ரெயில்களும் நிற்குமா.? அணைத்து ரெயில்களும் நிற்கும் என்றால் எப்படி புரிந்து கொள்வது.?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital







Thoothukudi Business Directory