» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி சிவன் கோவிலில் மார்கழி மாதம் பூஜை நேரங்கள் மாற்றம்
திங்கள் 15, டிசம்பர் 2025 11:07:46 AM (IST)
தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற சிவன் கோவிலில் மார்கழி மாதம் பூஜை நேரங்கள் மாற்றப்பட்டுள்ளது.
தூத்துக்குடி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அன்னை பாகம் பிரியாள் உடனுறை அருள்மிகு சங்கர ராமேஸ்வரர் திருக்கோவில் என்று அழைக்கப்படும் சிவன் கோயிலில் நாளை 16ஆம் தேதி முதல் மார்கழி மாதம் பிறப்பு முன்னிட்டு பூஜை நேரங்கள் மாற்றப்பட்டுள்ளதுஇதன்படி காலை 3.30மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 4 மணிக்கு திருவனந்தல் 5.30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி பூஜை, 8 மணிக்கு கால சந்தி 10 மணிக்கு உச்சிக்கால பூஜை முடிந்ததும் கோவில் நடை அடைக்கப்படுகிறது. மாலை 4 மணிக்கு மீண்டும் கோவில்நடை திறக்கப்படுகிறது.
5.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடக்கிறது இரவு 8 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படுகிறது. வாரந்தோறும் வியாழக்கிழமை வெள்ளிக்கிழமை சனிக்கிழமை ஆகிய மூன்று தினங்கள் மட்டும் மதியம் 12 மணி வரை கோவில் நடை திறந்திருக்கும்.
தெப்பக்குளம் ஸ்ரீமாரியம்மன் திருக்கோவில்
தூத்துக்குடி தெப்பக்குளம் ஸ்ரீமாரியம்மன் திருக்கோவிலில் மார்கழி மாதம் காலை 4:30 மணி நடைதிறப்பு, 5.30மணிக்கு தீபாரதனை, 10.00மணிக்கு திருகாப்பிடு, மாலை 5 மணிக்கு நடைதிறப்பு, 8 மணி திருகாப்பிடு செவ்வாய்,வெள்ளிகிழமைகளில் பகல் 12 மணிக்கும் இரவு 9 மணிக்கும் திருகாப்பீடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் கேரளா லாட்டரி சீட்டு விற்றவர் கைது
செவ்வாய் 16, டிசம்பர் 2025 8:02:13 AM (IST)

தந்தைக்கு சரமாரியாக அரிவாள் வெட்டு: மகன் கைது!
செவ்வாய் 16, டிசம்பர் 2025 8:01:00 AM (IST)

கணவரை தாக்கிவிட்டு இளம்பெண் பலாத்காரம் : சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது!
செவ்வாய் 16, டிசம்பர் 2025 7:58:06 AM (IST)

கணவரிடம் சி.பி.சி.ஐ.டி.போலீசார் விசாரணைக்கு எதிர்ப்பு: தீக்குளிக்க முயன்ற பெண் மீது வழக்கு
செவ்வாய் 16, டிசம்பர் 2025 7:54:19 AM (IST)

மின்கம்பியாள், உதவியாளா் தகுதிகாண் தோ்வு நாள் மாற்றம்: ஆட்சியர் தகவல்
செவ்வாய் 16, டிசம்பர் 2025 7:39:39 AM (IST)

தூத்துக்குடி நகர போக்குவரத்து பிரிவு காவல் அலுவலகத்தில் எஸ்பி ஆய்வு!
திங்கள் 15, டிசம்பர் 2025 9:18:01 PM (IST)










