» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கணவரிடம் சி.பி.சி.ஐ.டி.போலீசார் விசாரணைக்கு எதிர்ப்பு: தீக்குளிக்க முயன்ற பெண் மீது வழக்கு
செவ்வாய் 16, டிசம்பர் 2025 7:54:19 AM (IST)
பெரியதாழையில் மோசடி வழக்கு தொடர்பாக கணவரிடம் விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் தகராறு செய்து, உடலில் டீசலை ஊற்றி தீக்குளிக்க முயன்ற பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், தட்டார்மடம் அருகே உள்ள பெரியதாழையை சேர்ந்தவர் ரத்தினகுமார். இவர் மீது கடந்த 2019-ம் ஆண்டு நெல்லையில் நடந்த மோசடி தொடர்பாக மதுரை சி.பி.சி.ஐ.டி.போலீசார் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக மேல்விசாரணை நடத்துவதற்காக சம்பவத்தன்று மதுரை சி.பி.சி.ஐ.டி போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி, தலைமையில் 20-க்கும் மேற்பட்ட போலீசார் பெரியதாழை சென்றனர். அங்கு வீட்டில் இருந்த ரத்தினகுமாரிடம் போலீசார் விசாரணை நடத்த தொடங்கியுள்ளனர்.
போலீசாரின் விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது மனைவி சோனியா வாய்த்தகராறு செய்ததாக கூறப்படுகிறது. திடீரென வீட்டில் இருந்த டீசலை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றாராம். உடனடியாக அவரது கணவரும், போலீசாரும் அவரை தடுக்க முயன்றுள்ளனர். இதில் கணவர் மீதும் டீசல் பட்டுள்ளது. உடனடியாக சோனியா மீது வீட்டிலிருந்த தண்ணீரை ஊற்றி அவரை காப்பாற்றிய போலீசாரிடம், தானும் உடலில் உள்ள டீசலை கழுவிவிட்டு வருவதாக ரத்தினகுமார் வீட்டிற்கு பின்புறம் சென்றாராம்.
அவர் நீண்டநேரமாக வராததால் போலீசார் தேடியுள்ளனர். அவர் தப்பி ஓடிவிட்டது தெரிய வந்ததை ெதாடர்ந்து, போலீசார் விசாரணை நடத்தமுடியாமல் திரும்பி சென்றனராம். இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி தட்டார்மடம் போலீசாரிடம் புகார் கொடுத்தார். இதன்பேரில் போலீசாரின் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்ததாக சோனியா மீது தட்டார்மடம் இன்ஸ்பெக்டர் வேலம்மாள் வழக்குப்பதிவு செய்து விசாணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூய்மைப் பணியாளர்கள் திடீர் போராட்டம்: தூத்துக்குடியில் பரபரப்பு!
செவ்வாய் 16, டிசம்பர் 2025 12:55:11 PM (IST)

பொங்கல் தொகுப்புடன் ரூ.5000 வழங்கிட கோரி கட்டுமான தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்!
செவ்வாய் 16, டிசம்பர் 2025 12:32:30 PM (IST)

சோதனை சாவடிகளில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் : ஆட்சியர் துவக்கி வைத்தார்!
செவ்வாய் 16, டிசம்பர் 2025 12:23:49 PM (IST)

தூத்துக்குடியில் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் : இ-ஃபைலிங் நடைமுறைக்கு எதிர்ப்பு
செவ்வாய் 16, டிசம்பர் 2025 12:15:15 PM (IST)

தொழுநோய் மருத்துவமனையில் கிறிஸ்மஸ் பொம்மைகள், மெழுகுவர்த்தி விற்பனை!
செவ்வாய் 16, டிசம்பர் 2025 12:09:14 PM (IST)

தூத்துக்குடியில் தனியார் நிறுவன டிரைவர் திடீர் சாவு
செவ்வாய் 16, டிசம்பர் 2025 10:55:27 AM (IST)










