» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தொழுநோய் மருத்துவமனையில் கிறிஸ்மஸ் பொம்மைகள், மெழுகுவர்த்தி விற்பனை!
செவ்வாய் 16, டிசம்பர் 2025 12:09:14 PM (IST)

தூத்துக்குடி புனித ஜோசப் தொழுநோய் மருத்துவமனையில் கிறிஸ்மஸ் புத்தாண்டை முன்னிட்டு வண்ண வண்ண பொம்மைகள், மெழுகுவர்த்தி தயாரித்து விற்பனை செய்கின்றனர்.
தூத்துக்குடி அருகே உள்ள ஆரோக்கியபுரம் புனித ஜோசப் தொழு நோய் மருத்துவமனை அருட்சகோதரிகளால் பல ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது இங்கு சிறந்த தொழிலாளர்களைக் கொண்டு பல ஆண்டுகளாக கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு தேவையான மெழுகுவர்த்திகள் செய்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.10 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை கோவில்களுக்கு மெழுகுவர்த்திகள் தயாரித்து விற்பனை செய்கின்றனர்.
அது போல் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு உறவினர்களுக்கு மற்றும் நண்பர்களுக்கு பரிசாக வழங்கிட தங்கள் வீடுகளில் அலங்கார பொருட்களாக வைத்திட கிறிஸ்மஸ் தாத்தா பொம்மை, கிறிஸ்மஸ் மரம் போன்ற பொம்மைகள் விற்பனை செய்யப்படுகிறது. மெழுகுவர்த்திகள் 30 ரூபாய் 50 ரூபாய் 60 ரூபாய் 100 ரூபாய் 120 ரூபாய் போன்ற விலைகளில் கிடைக்கிறது. பல்வேறு ஊர்களில் இருந்தும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் வந்து வாங்கி செல்கின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்திய மருத்துவ சங்கத்தின் மாநில மாநாடு: தூத்துக்குடி மருத்துவருக்கு விருது!
செவ்வாய் 16, டிசம்பர் 2025 4:46:47 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் முற்றுகை போராட்டம்
செவ்வாய் 16, டிசம்பர் 2025 4:39:25 PM (IST)

நாகம்பட்டி கல்லூரியில் 5000 மரக்கன்றுகள் நடும் விழா : ஆட்சியர் இளம் பகவத் பங்கேற்பு
செவ்வாய் 16, டிசம்பர் 2025 4:35:37 PM (IST)

தூய்மைப் பணியாளர்கள் திடீர் போராட்டம்: தூத்துக்குடியில் பரபரப்பு!
செவ்வாய் 16, டிசம்பர் 2025 12:55:11 PM (IST)

பொங்கல் தொகுப்புடன் ரூ.5000 வழங்கிட கோரி கட்டுமான தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்!
செவ்வாய் 16, டிசம்பர் 2025 12:32:30 PM (IST)

சோதனை சாவடிகளில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் : ஆட்சியர் துவக்கி வைத்தார்!
செவ்வாய் 16, டிசம்பர் 2025 12:23:49 PM (IST)










