» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூய்மைப் பணியாளர்கள் திடீர் போராட்டம்: தூத்துக்குடியில் பரபரப்பு!
செவ்வாய் 16, டிசம்பர் 2025 12:55:11 PM (IST)

தூத்துக்குடியில் தூய்மைப் பணியாளர்கள், வாகனங்களுடன் ஒப்பந்த நிறுவன அலுவலகம் முன்பு திடீர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடியில் தூய்மை பாரத இயக்கம் ஓட்டுநர்கள் பணியாளர் நல சங்கம் மாவட்டத் தலைவர் பொன்ராஜ் என்பவரை மாநகராட்சி ஒப்பந்ததாரரான அவர்லேண்ட் நிறுவன மேலாளர் முருகேசன் பணியிடை நீக்கம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏஐசிசிடியு மாநில செயற்குழு உறுப்பினர் சகாயம், சிபிஐ எம்எல் மாவட்ட பொறுப்பாளர் முருகன் மற்றும் நிர்வாகிகள், மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் சுமார் 40 குப்பை அள்ளும் வாகனங்களுடன் ஒப்பந்ததாரர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு ஈடுபட்டனர்.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஒப்பந்தக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டம் கைவிடப்பட்டது. போராட்டத்தில் 125 பெண்கள் உட்பட 200 பேர் கலந்து கொண்டனர். போராட்டத்தால், அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் பரபரப்பு நிலவியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்திய மருத்துவ சங்கத்தின் மாநில மாநாடு: தூத்துக்குடி மருத்துவருக்கு விருது!
செவ்வாய் 16, டிசம்பர் 2025 4:46:47 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் முற்றுகை போராட்டம்
செவ்வாய் 16, டிசம்பர் 2025 4:39:25 PM (IST)

நாகம்பட்டி கல்லூரியில் 5000 மரக்கன்றுகள் நடும் விழா : ஆட்சியர் இளம் பகவத் பங்கேற்பு
செவ்வாய் 16, டிசம்பர் 2025 4:35:37 PM (IST)

பொங்கல் தொகுப்புடன் ரூ.5000 வழங்கிட கோரி கட்டுமான தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்!
செவ்வாய் 16, டிசம்பர் 2025 12:32:30 PM (IST)

சோதனை சாவடிகளில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் : ஆட்சியர் துவக்கி வைத்தார்!
செவ்வாய் 16, டிசம்பர் 2025 12:23:49 PM (IST)

தூத்துக்குடியில் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் : இ-ஃபைலிங் நடைமுறைக்கு எதிர்ப்பு
செவ்வாய் 16, டிசம்பர் 2025 12:15:15 PM (IST)










