» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஆயுதம் வைத்திருந்தவர்களை மடக்கி பிடித்து கைது செய்த போலீசாருக்கு எஸ்பி பாராட்டு!
திங்கள் 15, டிசம்பர் 2025 9:11:37 PM (IST)

தூத்துக்குடி அருகே வாகன தணிக்கைகளின் போது ஆயுதம் வைத்திருந்தவர்களை மடக்கி பிடித்து கைது செய்தும், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தும் சிறப்பாக நடவடிக்கை மேற்கொண்ட 7 காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கூட்டாம்புளி பாலம் அருகில் கடந்த 13.12.2025 அன்று மாலை புதுக்கோட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் கணபதி, தமிழ்நாடு சிறப்பு காவல்படை காவலர்கள் மாரியப்பன் மற்றும் அருள்மணி பிரபாகரன் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக சந்தேகத்திற்கிடமாக வந்த ஒரு காரை நிறுத்தும்போது காரை நிறுத்தாமல் சென்றவர்களை மடக்கி பிடித்து விசாரணை செய்ததில் தூத்துக்குடி சிவத்தையாபுரம் பகுதியைச் சேர்ந்த ராமர் மகன் கார்த்திக் (30), சாயர்புரம் பகுதியைச் சேர்ந்தவர்களான பெரியசாமி மகன் முத்துசெல்வம் (20), திருமணி மகன் ரமேஷ் அரவிந்த் (21), செந்தில்முருகன் மகன் லத்தீஷ் (20), ஜார்ஜ் மகன் பால்ராஜ் (20), சுந்தர்மணி மகன் ரிஸோன் வேதமணி(21) ஆகியோர் என்பதும் காரில் அரிவாள் மற்றும் கத்தி ஆகியவற்றை மறைத்து வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்து புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்படி எதிரியை கைது செய்து அரிவாள் மற்றும் கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
அதே போன்று கடந்த 12.12.2025 அன்று மாலை புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பரலட்சி ரோடு பகுதியில் வைத்து விளாத்திகுளம் காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் சத்தியசீலன் மற்றும் புதூர் காவல் நிலைய தனிப்பிரிவு காவலர் ஜனார்தனன், காவலர்கள் பிச்சைக்கனி, முனியசாமி ஆகியோர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக சந்தேகத்திற்கிடமாக வந்த மினி சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் அவர் வரலட்சுமி வடக்குநத்தம் பகுதியைச் சேர்ந்த குழந்தைசெல்வம் மகன் சக்கரபாண்டி (33) என்பதும் சுமார் 11 கிலோ 700 கிராம் தடை செய்யப்பட்ட புகையிலை மேற்படி சரக்கு வாகனத்தில் வைத்திருந்ததும் தெரியவந்தது.
இச்சம்பவம் குறித்து புதூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்படி எதிரியை கைது செய்து தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேற்படி 2 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வாகனத்தணிக்கையின் போது துரிதமாக செயல்பட்டு எதிரிகளை பிடித்து கைது செய்து அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் தடுத்தும், புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தும் சிறப்பாக பணிபுரிந்த மேற்படி 7 காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இன்று (15.12.2025) நற்பணிசான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூய்மைப் பணியாளர்கள் திடீர் போராட்டம்: தூத்துக்குடியில் பரபரப்பு!
செவ்வாய் 16, டிசம்பர் 2025 12:55:11 PM (IST)

பொங்கல் தொகுப்புடன் ரூ.5000 வழங்கிட கோரி கட்டுமான தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்!
செவ்வாய் 16, டிசம்பர் 2025 12:32:30 PM (IST)

சோதனை சாவடிகளில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் : ஆட்சியர் துவக்கி வைத்தார்!
செவ்வாய் 16, டிசம்பர் 2025 12:23:49 PM (IST)

தூத்துக்குடியில் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் : இ-ஃபைலிங் நடைமுறைக்கு எதிர்ப்பு
செவ்வாய் 16, டிசம்பர் 2025 12:15:15 PM (IST)

தொழுநோய் மருத்துவமனையில் கிறிஸ்மஸ் பொம்மைகள், மெழுகுவர்த்தி விற்பனை!
செவ்வாய் 16, டிசம்பர் 2025 12:09:14 PM (IST)

தூத்துக்குடியில் தனியார் நிறுவன டிரைவர் திடீர் சாவு
செவ்வாய் 16, டிசம்பர் 2025 10:55:27 AM (IST)










