» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தந்தைக்கு சரமாரியாக அரிவாள் வெட்டு: மகன் கைது!
செவ்வாய் 16, டிசம்பர் 2025 8:01:00 AM (IST)
கோவில்பட்டியில் வேலைக்கு செல்லுமாறு கூறிய தந்தையை அரிவாளால் சரமாரியாக வெட்டிய மகனை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சுப்பிரமணியபுரம் 3-வது தெருவை சேர்ந்தவர் சங்கையா மகன் முருகன் (54). கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் மாரிராஜா(23). டிரைவர். இவர் அமரர் ஊர்தி ஒன்றில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்தநிலையில் முருகன் நேற்று காலையில் வேலைக்கு சென்று விட்டு, மதிய உணவு சாப்பிடுவதற்காக வீட்டிற்கு வந்தார். அப்போது மாரி ராஜா வேலைக்கு செல்லாமல் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தாராம்.
இதை பார்த்த அவர், வீட்டில் தூங்கி கொண்டிருக்காமல் வேலைக்கு செல்லுமாறு மகனிடம் கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த மாரிராஜா தந்தையை அவதூறாக பேசி வீட்டிற்கு வெளியே தள்ளிவிட்டுள்ளார். வீட்டிற்கு வெளியே கீழே விழுந்து தட்டுத்தடுமாறி எழுந்த அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதனால் பலத்த காயமடைந்த முருகனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு சென்று மாரி ராஜாவை கண்டித்து உள்ளனர்.
உடனே அவர், அரிவாளை காட்டி கொலைமிரட்டல் விடுத்தவாறு அங்கிருந்து தப்பி சென்று விட்டார். பலத்த காயங்களுடன் இருந்த முருகனை உறவினர்கள் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் கோவில்பட்டி கிழக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து, மாரிராஜாவை கைது செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூய்மைப் பணியாளர்கள் திடீர் போராட்டம்: தூத்துக்குடியில் பரபரப்பு!
செவ்வாய் 16, டிசம்பர் 2025 12:55:11 PM (IST)

பொங்கல் தொகுப்புடன் ரூ.5000 வழங்கிட கோரி கட்டுமான தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்!
செவ்வாய் 16, டிசம்பர் 2025 12:32:30 PM (IST)

சோதனை சாவடிகளில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் : ஆட்சியர் துவக்கி வைத்தார்!
செவ்வாய் 16, டிசம்பர் 2025 12:23:49 PM (IST)

தூத்துக்குடியில் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் : இ-ஃபைலிங் நடைமுறைக்கு எதிர்ப்பு
செவ்வாய் 16, டிசம்பர் 2025 12:15:15 PM (IST)

தொழுநோய் மருத்துவமனையில் கிறிஸ்மஸ் பொம்மைகள், மெழுகுவர்த்தி விற்பனை!
செவ்வாய் 16, டிசம்பர் 2025 12:09:14 PM (IST)

தூத்துக்குடியில் தனியார் நிறுவன டிரைவர் திடீர் சாவு
செவ்வாய் 16, டிசம்பர் 2025 10:55:27 AM (IST)










