» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஓய்வூதியப் பலன்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

வியாழன் 11, டிசம்பர் 2025 8:18:53 PM (IST)



ஓய்வூதியப் பலன்கள் பெறுவதில் உள்ள சிரமங்களுக்கு நிரந்தரத் தீர்வு காண வலியுறுத்தி தூத்துக்குடியில் பேரூராட்சி நகராட்சி மாநகராட்சி அனைத்து ஓய்வூதியர் நல அமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

தமிழ்நாடு பேரூராட்சி, நகராட்சி மாநகராட்சி ஓய்வூதியர்கள் ஓய்வூதிய பணபலன்கள் மற்றும் PF வட்டி பெறுவதில் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகிறார்கள். ஓய்வூதியர்களின் நலன்களை பாதுகாக்க தமிழக அரசு தலையிட்டு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி மாநில மாநாடு அறைகூவல் தீர்மானத்தின் அடிப்படையில் தூத்துக்குடியில் மாநகராட்சி அலுவலகம் முன்பு கோரிக்கை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  மாவட்ட அமைப்பு குழு மனோகரன் தலைமை வகித்தார். இதில் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital








Thoothukudi Business Directory