» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி பள்ளியில் பாரதியார் பிறந்த தின விழா

வியாழன் 11, டிசம்பர் 2025 8:18:15 PM (IST)



தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளியில் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 143வது பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது.  

நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் தட்சிணாமூர்த்தி தலைமை வகித்து பாரதியார் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கணித பயிற்சி ஆசிரியை  திவ்யா பாரதியாரின் வாழ்க்கை, விடுதலைப் போரில் அவரின் பங்களிப்புகள், பெண் விடுதலை மற்றும் கவிதை சிறப்புகள் குறித்து விளக்கி கூறினார். 

அதனை தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு கவிதை, ஓவியம் மற்றும்  பேச்சு போட்டிகள் நடைபெற்றன. அதில் வெற்றி பெற்றவர்களுக்கு  பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் ஆசிரியர்கள்,  பயிற்சி ஆசிரியைகள் உமா மகேஸ்வரி, விஜி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். பயிற்சி ஆசிரியை இந்து இசக்கி நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory