» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கனிமவள கொள்ளை, ஆக்கிரமிப்புகளை தடுக்க வலியுறுத்தி கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம்!
வியாழன் 11, டிசம்பர் 2025 4:54:50 PM (IST)

கனிமவள கொள்ளை, கோவில் சொத்துக்கள் அபகரிப்பை தடுக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவில்பட்டியில் தமிழ் பேரரசு கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவில்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் சாலை, நீர்நிலை, அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு உள்ளிட்டவற்றை அகற்ற வேண்டும், வட்டாட்சியர் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் நடைபெறும் பணிகள் குறித்து மாதம் ஒரு முறை நேரில் ஆய்வு செய்ய வேண்டும், அரசு நூலகத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும், தனியார் சந்தை வழக்கு, இளையரசனேந்தல் சேவை சாலை வழக்கு ஆகியவற்றை அரசு சார்பில் விரைந்து நடத்தி முடிக்க வேண்டும், கனிமவள கொள்ளை, கோவில் சொத்துக்கள் அபகரிக்கப்படுவதை தடுக்க வலியுறுத்தி கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு தமிழ் பேரரசு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் வழக்கறிஞர் சரவணன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மு.கணேசன், மாவட்ட வழக்கறிஞரணி செயலாளர் லட்சுமணபாண்டியன், இளைஞரணி செயலாளர் இசக்கிமுத்து, மாவட்ட பொருளாளர் குமார், குருநாதன் மற்றும் சமூக ஆர்வலர்கள் ராஜேசு கண்ணா, பரமசிவம், சுதாகர், பால்ராஜ், ராஜா, ராஜசிம்மன், முருகன், விவசாய அணி தலைவர் அருமைராஜ், நாம் தமிழர் கட்சி காமநாயக்கன்பட்டி பொறுப்பாளர் ஆரோக்கியராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் கோசாலையில் மாட்டுப்பொங்கல் விழா
வெள்ளி 16, ஜனவரி 2026 12:44:33 PM (IST)

லாரி மீது வேன் மோதி 2 பேர் பரிதாப பலி : தூத்துக்குடி அருகே சோக சம்பவம்!
வெள்ளி 16, ஜனவரி 2026 11:50:15 AM (IST)

மேல்மருவத்தூர் ஆன்மிக இயக்கம் சார்பில் 41ம் ஆண்டு பொங்கல் சமுதாயப்பணி
வெள்ளி 16, ஜனவரி 2026 11:40:38 AM (IST)

பா.ஜ.க. கோலப்போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கல்
வெள்ளி 16, ஜனவரி 2026 11:31:16 AM (IST)

தூத்துக்குடி நல்லாயன் பள்ளியில் பொங்கல் விழா
வெள்ளி 16, ஜனவரி 2026 11:16:57 AM (IST)

மூன்று முறை தற்கொலைக்கு முயன்றவர் மீண்டும் தற்கொலை : தூத்துக்குடியில் பரிதாபம்!
வெள்ளி 16, ஜனவரி 2026 11:11:50 AM (IST)








