» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பக்கிள் ஓடையை அகலப்படுத்தும் பணி விரைவில் தொடங்கும் : மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்
வியாழன் 11, டிசம்பர் 2025 12:13:51 PM (IST)
தூத்துக்குடி பக்கிள் ஓடையை 5 மீட்டர் அகலப்படுத்தும் பணி விரைவில் தொடங்க உள்ளது என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா தலைமையில் நடைபெற்றது. மண்டல தலைவர் அன்னலட்சுமி கோட்டுராஜா முன்னிலை வகித்தார். முகாமை தொடங்கி வைத்து மேயர் ஜெகன் பெரியசாமி பேசியதாவது "பாதாளக் சாக்கடை திட்டத்தில் இதுவரை இணைப்பு பெறாதவர்களுக்கு இணைப்பு பெற வேண்டும். அப்போதுதான் இந்த பகுதியில் சாலைகள் அமைக்க முடியும்.
மேற்கு மண்டலத்தில் மட்டும் 110 சாலைகள் போட வேண்டியுள்ளது. மழைக்காலம் முடிந்ததும் பணிகள் நடைபெறும். அதற்குள் பாதாள சாக்கடை இணைப்பு பணிகளை முடிக்க வேண்டும். பக்கிள் ஓடை 5 மீட்டர் அகலப்படுத்தும் பணி விரைவில் தொடங்க உள்ளது. இதுபோல் ராஜாஜி பூங்கா விரிவுபடுத்தப்பட உள்ளது. தற்போது போடப்படும் கால்வாய்கள் மூடி போட்டு அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கு பொதுமக்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது.
தெப்பக்குளத்தில் சீரமைப்பு பணி நடந்து வருகிறது தண்ணீரை வெளியேற்றியதால் இரண்டு பக்கம் ஆறடிக்கு இடிந்தது இதை சீரமைக்கும் பணி காலையிலே தொடங்கி நடந்து வருகிறது என்று தெரிவித்தார். பின்னர் பொதுமக்களிடமிருந்து 32 மனுக்களை பெற்றார். நிகழ்ச்சியில் மாநகர சுகாதார அலுவலர் சரோஜா மாநகராட்சி கவுன்சிலர்கள் கனகராஜ். விஜயலட்சுமி, பொன்னப்பன், பொன்னப்பன், ஜான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 20 வருடம் சிறை : தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
வெள்ளி 12, டிசம்பர் 2025 8:11:55 PM (IST)

என்டிபிஎல் சார்பில் புதிய அங்கன்வாடி மையம் : அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்.
வெள்ளி 12, டிசம்பர் 2025 8:05:55 PM (IST)

நோ பார்க்கிங்கில் நிறுத்தப்பட்ட வாகனங்களுக்கு அபராதம் : போலீசார் அதிரடி!
வெள்ளி 12, டிசம்பர் 2025 7:58:40 PM (IST)

கொங்கராயகுறிச்சி கோவிலில் மஹாதேவ அஷ்டமி வழிபாடு
வெள்ளி 12, டிசம்பர் 2025 5:38:10 PM (IST)

பாதாள சாக்கடை குழாய்களில் அடைப்பு குறித்து புகார் அளிக்க கட்டணமில்லா தொலைபேசி!
வெள்ளி 12, டிசம்பர் 2025 5:33:08 PM (IST)

திமுக கவுன்சிலரால் சேற்றிலும், சகதியிலும் அல்லல் படும் பொதுமக்கள்!
வெள்ளி 12, டிசம்பர் 2025 5:17:54 PM (IST)










