» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் படகு ஓட்டுநர் உரிமச் சான்றிதழ் உள்வளாகப் பயிற்சி தொடக்கம்
வியாழன் 28, ஆகஸ்ட் 2025 3:21:57 PM (IST)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி சார்பில் நான் முதல்வன் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் படகு ஓட்டுநர் உரிமச் சான்றிதழ் குறித்த ஓரு வார கால உள்வளாகப் பயிற்சி இன்று தொடங்கியது.
தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமான மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் மீன்பிடித் தொழில் நுட்பவியல் மற்றும் மீன்வளப் பொறியியல் துறையானது, நான் முதல்வன் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் சென்னையில் அமைந்துள்ள தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக நிதியுதவியுடன் நடத்தும் ‘‘படகு ஓட்டுநர் உரிமச் சான்றிதழ் படிப்புப் பயிற்சி" என்ற ஒரு வாரகால உள்வளாகப் பயிற்சியானது 28.08.2025 முதல் 04.09.2025 வரை நடைபெற உள்ளது.
இதன் துவக்க விழா தூத்துக்குடி மீன்பிடித் துறைமுக வளாகத்தில் அமைந்துள்ள மீன்வளத் தொழில் காப்பகம் மற்றும் தொழில்சார் பயிற்சி மையத்தில் வைத்து இன்று நடைபெற்றது. இப்பயிற்சியில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த 25 விசைப்படகு மீனவர்கள் கலந்து கொண்டனர். மீன்பிடித் தொழில் நுட்பவியல் மற்றும் மீன்வளப் பொறியியல் துறையின் உதவிப் பேராசிரியர் மற்றும் பயிற்சித் திட்ட ஒருங்கிணைப்பாளர் த. ரவிக்குமார் வரவேற்புரை மற்றும் பயிற்சி விளக்கவுரையாற்றினார்.
துவக்க விழாவிற்கு மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் முதல்வர் சா. ஆதித்தன் தலைமையேற்றார். அவர் தம் தலைமையுரையில் மீன்பிடித் தொழில்நுட்பத் துறையில் மீனவர்கள் தங்கள் தொழில்நுட்ப அறிவை பல்வேறு பயிற்சித் திட்டங்கள் மூலம் மேம்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இவ்விழாவில் தூத்துக்குடி மாவட்டத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அலுவலகத்தின் உதவி இயக்குநர், ஏஞ்சல் விஜய நிர்மலா மற்றும் தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி ஆய்வாளர் சு. மேரி வெஸ்னா வாழ்த்துரை வழங்கினர். உதவிப் பொறியாளர் அ. அந்தோணி மிக்கேல் பிரபாகர், நன்றியுரை ஆற்றினார். முதுநிலை ஆராய்ச்சியாளர் சூ. எமிமா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். துறையின் பணியாளர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் பயிற்சி ஒருங்கிணைப்பாளர்களாகச் செயல்பட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பைக் மீது கார் மோதியதில் எலெக்ட்ரிசியன் பலி: தூத்துக்குடியில் பரிதாபம்!!
வியாழன் 18, டிசம்பர் 2025 11:39:17 AM (IST)

தூத்துக்குடியில் ரூ.1 கோடி கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது - மேலும் மூவருக்கு வலைவீச்சு!
வியாழன் 18, டிசம்பர் 2025 11:26:04 AM (IST)

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 30 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை
வியாழன் 18, டிசம்பர் 2025 10:30:16 AM (IST)

ரயில் பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் : அமைச்சர் கீதா ஜீவன் தகவல்
வியாழன் 18, டிசம்பர் 2025 10:15:07 AM (IST)

தூத்துக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் பணியிட மாற்றம்
புதன் 17, டிசம்பர் 2025 8:52:10 PM (IST)

சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்தவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை!
புதன் 17, டிசம்பர் 2025 8:01:14 PM (IST)










