» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அதிமுக ஆட்சியில் செய்யாத திட்டத்தை 3 ஆண்டு திமுக ஆட்சியில் நிறைவேற்றியுள்ளோம்: மேயர்

வியாழன் 28, ஆகஸ்ட் 2025 3:08:09 PM (IST)



10 ஆண்டு அதிமுக ஆட்சியில் செய்யாத திட்டத்தை 3 ஆண்டு திமுக ஆட்சியில் நிறைவேற்றியுள்ளோம் என்று மக்கள் குறைதீர்க்கும் முகாமில் மேயர் ஜெகன் பெரியசாமி பேசினார். 

தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில், ஆணையா் பானோத் ம்ருந்கேந்தா்லால் முன்னிலையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. முகாமில் மேயர் பேசுகையில், "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுக்கிணங்க மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தின் அடிப்படையில் குறை தீர்க்கும் முகாம் நடைபெறுகிறது. இதில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் புதிய குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை, சாலை, கால்வாய், மின்விளக்கு உள்ளிட்ட பல்வேறு அடிப்படை பணிகளுக்கு மக்கள் கொடுக்கும் கோரிக்கை மனுக்களில் முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. 

இதுவரை 3000க்கும் மேற்பட்ட மனுக்கள் வரப்பெற்றுள்ளது. இந்த மண்டலத்தில் மட்டும் 610 மனுக்கள் வரப்பெற்று 524 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. அதில் 84 மனுக்களில் சாலை கால்வாய் கேட்டு விண்ணப்பித்தும் 2 மனுக்கள் ஆக்கிரமிப்பு மீட்க வேண்டும் என்றும் அளித்துள்ளனா். இந்த மண்டலத்தை பொறுத்தவரை முத்தையாபுரம் அத்திமரப்பட்டி ஊராட்சி பகுதிகள் மாநகராட்சியோடு இணைக்கப்பட்டு 10 ஆண்டுகலாக அதிமுக ஆட்சியில் எந்த வளா்ச்சி பணியும் மேற்கொள்ளாமல் கிடப்பில் கிடந்தன. 

ஆனால் 3 ஆண்டு காலமாக 80 சதவீதம் எல்லா பகுதிகளுக்கும் கால்வாய் சாலை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் பூங்கா இல்லாமல் இருந்தது. அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. விரைவில் பூங்கா திறக்கப்படும். அதே போல் மறுவாழ்வு மையமும் திறக்கப்படவுள்ளது. கோரம்பள்ளத்திலிருந்து இந்த முள்ளக்காடு முத்தையாபுரம் வழியாகதான் நிரம்பி நீர் மழை காலங்களில் கடலுக்கு சென்றடையும். 12 கிலோ மீட்டா் தூா்வாரப்பட்டு தண்ணீர் வழிந்தோடுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

22ம் ஆண்டில் பெய்த மழைக்கும் 23ம் ஆண்டில் இந்த நிலவரத்திற்கும் 24ம் ஆண்டில் பாதிப்பு இல்லாத வகையில் மக்களை பாதுகாத்துள்ளோம். எந்த பகுதியில் எல்லாம் மழைநீர் தேங்கும் நிலவரம் தொிந்தால் பொதுமக்கள் நேரடியாக தொடா்பு கொண்டு தொிவிக்கலாம். அதை முறையாக செய்து கொடுத்துவிடுவோம். 

மதுரையிலிருந்து தூத்துக்குடி முத்தையாபுரம் வழியாக தான் திருச்செந்தூருக்கு அதிக வாகனம் செல்கின்றன. அந்த சாலைகள் விாிவுப்படுத்தப்பட்டு நெருக்கடி இல்லாத நிலையை உருவாக்கி வருகிறோம் அதன் மூலம் வியாபார பிரமுகா்கள் பலனடைந்து கொள்ளலாம் தெற்கு மண்டலத்தில் நடைபெற்ற உங்ளுடன் ஸ்டாலின் முகாமில் மாநகராட்சி சம்பந்தப்பட்ட 203 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இன்றைய தினம் 17 பேருக்கு அந்த ஆணைகளும் வழங்கப்பட்டுள்ளன. தொடர்ந்து இந்த முகாம்களை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று பேசினாா். 

பின்னா் பொதுமக்கள் கோாிக்கை வைத்த பகுதியை சென்று பாா்வையிட்டாா். கூட்டத்தில் மாநகராட்சி பொறியாளர் தமிழ்செல்வன், துணை பொறியாளா் சரவணன், நகர அமைப்பு திட்ட துணைசெயற்பொறியாளர் காந்திமதி, நகர்நல அலுவலர் சரோஜா, இளநிலை பொறியாளர் செல்வம், துணை பொறியாளர் துர்காதேவி, சுகாதார ஆய்வாளர் ஸ்டாலின் பாக்கியநாதன், மேற்பாா்வையாளர் சுப்பிரமணியன், குழாய் ஆய்வாளர் நிக்ஸன், கவுன்சிலர்கள் சரவணகுமார், விஜயகுமார், பட்சிராஜ், வெற்றி செல்வன், வட்ட செயலாளர்கள் ரவீந்திரன், பிரசாந்த், மைக்கேல் ராஜ், பகுதி பொருளாளர் முத்துராஜா, மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையாின் நோ்முக உதவியாளர் துரைமணி, உள்பட அரசுத்துரை அலுவலா்கள் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital






CSC Computer Education



Thoothukudi Business Directory