» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தமிழக மீனவர்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேட்டி!!
செவ்வாய் 26, ஆகஸ்ட் 2025 12:54:37 PM (IST)
கச்சத்தீவு தமிழகத்திற்கு சொந்தமானது என்று தமிழக அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தீர்வு காணும் போது மீனவர்கள் நல்ல முறையில் மீன் பிடிக்க முடியும் என்று மீன்வளம் - மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
தூத்துக்குடியில் அவர் அளித்த பேட்டியில், "கச்சத்தீவு தமிழகத்திற்கு சொந்தமானது என்று தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அந்த வழக்கு முடிவுக்கு வரும் போது இதற்கான தீர்வு வரும். இதனை (கச்சத்தீவை) சரியாக செய்ய வேண்டும் என்று சொன்னால் மத்திய அரசு தான் இதை முனைப்போடு செய்து மீனவர்களை காப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அந்த பகுதிக்கு வரும்போது பலமுறை கச்சத்தீவை நாங்கள் மீட்போம் என்ற வாக்குறுதியை வழங்கியுள்ளார்கள். சுஷ்மாசுவராஜ்-ல் இருந்து மத்திய அமைச்சர்கள் வரும்போது இதை சொல்கிறார்கள். அந்த வகையில் கச்சத்தீவை மீட்க அவர்கள் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். கச்சத்தீவு தமிழகத்திற்கு சொந்தமானது என்ற வகையில் தமிழக அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கில் தீர்வுகாணும் போது மீனவர்கள் நல்ல முறையில் மீன் பிடிக்க முடியும் என்றார்.
மேலும், மீனவர்கள் கடத்தலில் ஈடுபடுவதாக சில வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது இதனை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்ற கேள்விக்கு, மீனவர்கள் எந்த வகையிலும் கடத்தலுக்கு உதவி செய்வது கிடையாது. கடத்தல் செய்பவர்கள் தனி. கடத்தலை பிடிப்பதற்காக கடலோர காவல் படை உள்ளது. அது கண்காணிக்கும் என்று தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பைக் மீது கார் மோதியதில் எலெக்ட்ரிசியன் பலி: தூத்துக்குடியில் பரிதாபம்!!
வியாழன் 18, டிசம்பர் 2025 11:39:17 AM (IST)

தூத்துக்குடியில் ரூ.1 கோடி கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது - மேலும் மூவருக்கு வலைவீச்சு!
வியாழன் 18, டிசம்பர் 2025 11:26:04 AM (IST)

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 30 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை
வியாழன் 18, டிசம்பர் 2025 10:30:16 AM (IST)

ரயில் பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் : அமைச்சர் கீதா ஜீவன் தகவல்
வியாழன் 18, டிசம்பர் 2025 10:15:07 AM (IST)

தூத்துக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் பணியிட மாற்றம்
புதன் 17, டிசம்பர் 2025 8:52:10 PM (IST)

சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்தவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை!
புதன் 17, டிசம்பர் 2025 8:01:14 PM (IST)










