» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மதுபானக் கூடத்தில் கேரள நபர் குத்திக் கொலை : ஒருவர் கைது
செவ்வாய் 26, ஆகஸ்ட் 2025 8:01:45 AM (IST)
சாத்தான்குளம் அருகே மதுபானக் கூடத்தில் ஏற்பட்ட தகராறில் கேரள நபர் மது பாட்டிலால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.
திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் பாச்சான் மகன் விஜூ (56). இவர், சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்புள்ள உணவகத்தில் கடந்த வாரம் வேலைக்கு சேர்ந்து பணி செய்து வந்தார். நேற்று வேலையின் போது, விஜூ மது குடித்துவிட்டு வந்ததால் கடை உரிமையாளர் அவரை வேலையை விட்டு நீக்கியதாக கூறப்படுகிறது.
பின்னர், விஜூ சாத்தான்குளம் அருகே உள்ள அமுதுண்ணாக்குடி மதுபானக் கடையில் மது வாங்கி, அதன் அருகில் உள்ள கூடத்தில் மது அருந்த சென்றுள்ளார். அப்போது சாத்தான்குளம் அருகே உள்ள ஞானியார் குடியிருப்பைச் சேர்ந்த சித்திரைவேல் மகன் சித்திரைமுத்து என்ற வெள்ளையனும் (56) அங்கு வந்து மது குடித்துள்ளார்.
அப்போது இருவருக்குமிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரம் அடைந்த சித்திரைமுத்து, அருகில் கிடந்த மது பாட்டிலை உடைத்து விஜூ கழுத்தில் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்டீபன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று சடலத்தை மீட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை செய்யப்பட்ட நபரின் உறவினர்கள் திருவனந்தபுரத்தில் உள்ளதால் அவர்களுக்கு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். கொலை தொடர்பாக சித்திரைமுத்து என்ற வெள்ளையனை போலீசார் கைது செய்து, மேலும் விசாரித்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பைக் மீது கார் மோதியதில் எலெக்ட்ரிசியன் பலி: தூத்துக்குடியில் பரிதாபம்!!
வியாழன் 18, டிசம்பர் 2025 11:39:17 AM (IST)

தூத்துக்குடியில் ரூ.1 கோடி கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது - மேலும் மூவருக்கு வலைவீச்சு!
வியாழன் 18, டிசம்பர் 2025 11:26:04 AM (IST)

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 30 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை
வியாழன் 18, டிசம்பர் 2025 10:30:16 AM (IST)

ரயில் பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் : அமைச்சர் கீதா ஜீவன் தகவல்
வியாழன் 18, டிசம்பர் 2025 10:15:07 AM (IST)

தூத்துக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் பணியிட மாற்றம்
புதன் 17, டிசம்பர் 2025 8:52:10 PM (IST)

சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்தவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை!
புதன் 17, டிசம்பர் 2025 8:01:14 PM (IST)










