» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நாசரேத்தில் மிஷனெரி ஊழிய ஆதரவு விற்பனை விழா
சனி 9, ஆகஸ்ட் 2025 4:23:53 PM (IST)

நாசரேத்தில் மிஷனெரி ஊழிய ஆதரவு விற்பனை விழா கஸ்பா துவக்கப் பள்ளி வளாகத்தில் வைத்து நடைபெற்றது.
விழாவிற்கு நாசரேத் பேராலய தலைமை குருவானவர் ஹென்றி ஜீவானந்தம் தலைமை வகித்தார். இந்த விற்பனை விழாவிற்கு ஆரம்பமாக குளோபல் மிஷினரி சங்கம் பொதுச் செயலாளர் குருவானவர் இஸ்ரவேல் ராஜதுரைசிங் ஜெபம் செய்தார். நாசரேத் தூய யோவான் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை கரோலின் ஜெசுவதி ரிப்பன் வெட்டி ஸ்டால்களை திறந்து வைத்தார். இதில் நாசரேத், கீழவெள்ளமடம்,வாழையடி, ஆழ்வார்திருநகரி,முதலிமொழி, வகுத்தான்குப்பம்,திருமறையூர் ஆகிய சேரகரங்களில் இருந்து மற்றும் சுற்று வட்டார அனைத்து கல்வி ஸ்தானங்களின் அநேக ஸ்டால்கள் இருந்தன.
இதில் நாசரேத் தூய யோவான் பேராலய உதவி குரு தனசேகர் ராஜா, முதலைமொழி சேகர குருவானவர் பால்ராஜ், பேராலய சபை ஊழியர்கள் ஜெபராஜ்.ஜெசு. நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் குணசீலராஜ் தூய யோவான் ஆசிரியர் பயிற்சி பள்ளி முதல்வர் லீதியாள், மாதிரிப் பள்ளி தலைமை ஆசிரியை ஷீலா, புனித லூக்கா சமுதாயக் கல்லூரி ஆர்ட் தொழிற் பள்ளி முதல்வர் ஜாண்சன், நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் கோயில்ராஜ், பொறியியல் கல்லூரி முதல்வர் ஜெயக்குமார், நாசரேத் காமா ஜெபக்குழு ஸ்தாபகர் குருவானவர் சாமுவேல், ஏசா, தூத்துக்குடி சபை மன்ற ஜிஎம்எஸ் முன்னேற்ற பணியாளர்கள் காட்வின் எபனேசர், ரேயினியஸ், ஈஸ்டர்ராஜ், கனோன் ஆர்தர் மர்காஷிஸ் சபை மன்ற ஜிஎம்எஸ் பணியாளர் பிரகாசபுரம் மாற்கு மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மற்றும் மாணவ, மாணவியர்கள் திரளாகக் கலந்து கொண்டு ஸ்டால்களில் உள்ள பொருட்களை வாங்கிச் சென்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 30 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை
வியாழன் 18, டிசம்பர் 2025 10:30:16 AM (IST)

ரயில் பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் : அமைச்சர் கீதா ஜீவன் தகவல்
வியாழன் 18, டிசம்பர் 2025 10:15:07 AM (IST)

தூத்துக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் பணியிட மாற்றம்
புதன் 17, டிசம்பர் 2025 8:52:10 PM (IST)

சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்தவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை!
புதன் 17, டிசம்பர் 2025 8:01:14 PM (IST)

தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு
புதன் 17, டிசம்பர் 2025 7:49:57 PM (IST)

முன்னாள் அமைச்சர் சி.த செல்லப்பாண்டியன் விருப்ப மனு
புதன் 17, டிசம்பர் 2025 7:42:57 PM (IST)










