» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் பசுமை நிலைத்தன்மை குறித்த தொகுப்பு வெளியீடு
வெள்ளி 8, ஆகஸ்ட் 2025 9:25:24 PM (IST)

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தின் திறன் மேம்பாட்டு காணொளிகள் மற்றும் பசுமை நிலைத்தன்மை குறித்த தொகுப்பு வெளியிடப்பட்டது.
கப்பல், துறைமுகங்கள் மற்றும் நீர்வழி போக்குவரத்து அமைச்சகம் செயலாளர் தா.கீ. ராமச்சந்திரன், புதுடில்லியில் நடைபெற்ற ஒரு சிறப்பு நிகழ்வில் வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தினால் உருவாக்கப்பட்ட திறன் மேம்பாட்டு காணொளிகள் மற்றும் நிலைத்தன்மை குறித்த தொகுப்பை வெளியிட்டார். இந்த வெளியீட்டு விழாவில் வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத் தலைவர் சுசாந்த குமார் புரோஹித், கப்பல், துறைமுகங்கள் மற்றும் நீர்வழி போக்குவரத்து அமைச்சகம் இணைச் செயலாளர் ஆர். லட்சுமணன், துணைத் தலைவர் ராஜேஷ் சௌந்தரராஜன் மற்றும் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இந்த புதிதாக வெளியிடப்பட்டுள்ள காணொளியில் கார்பன் நடுநிலைமை, பொருளாதார சுழற்சி, ஆற்றல் பாதுகாப்பு, பசுமை ஹைட்ரஜன், கடல் காற்றாலையின் ஆற்றல், பிளாஸ்டிக் மாசுபாட்டைக் குறைத்தல், சூரிய ஆற்றல், நிலையான எதிர்காலத்தை உருவாக்குதல், கழிவு மேலாண்மை மற்றும் பிரித்தெடுத்தல், நீர் பாதுகாப்பு, மற்றும் காற்றாலை ஆற்றலைப் பயன்படுத்துதல் போன்ற தலைப்புகள் உள்ளடகங்கிய 11 குறுகிய தகவல் காணொளிகள் அடங்கியுள்ளன. ஒவ்வொரு காணொளியும் பசுமை நடைமுறைகள மற்றும் துறைமுகத்தினால் மேற்கொள்ளப்படும் பசுமை நிலைத்தன்மைக்கான முயற்சிகளை எடுத்துக்காட்டிஅதன் மூலம் பங்குதாரர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் படியாகவும் செயல்படும்படி ஊக்கப்படுத்தும் படியாகவும் அமைந்துள்ளது.
இந்தகாணொளிகள் சமூக ஊடகங்கள் மற்றும் அனைத்து மக்களும் எளிதாகபார்க்கும் வகையில் வ.உ.சி.துறைமுகத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலான "vocport_tuticorin” -லிலும் ஒளிபரப்பப்படும். இது துறைமுகத்தின் பயிற்சி நிகழ்ச்சிகளிலும், கருத்தரங்குகளிலும் பங்குதாரர் கூட்டங்களிலும் பயன்பெறும் வண்ணமாய் பயன்படுத்தப்படும்.
வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத் தலைவர் சுசாந்தகுமார் புரோஹித், தனது செய்திகுறிப்பில், துறைமுகம் மரகன்று நடுதல், முதல் பசுமை ஹைட்ரஜன் செய்முறை போன்ற புதுமையான தொடர்ச்சியான நடவடிக்கைகளை செயல்படுத்தி பசுமையான எதிர்காலத்திற்கான அதன் வலுவான நிலைபாட்டை வெளிபடுத்தியுள்ளது என்று கூறினார். மேலும், கார்பன் நடுநிலைமை அடைவதற்கான துறைமுகதத்தின் நிலைத்தன்மை பயணத்தில் இந்தகாணொளித் தொடர் ஒரு முக்கியமாக கட்டமாக அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 30 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை
வியாழன் 18, டிசம்பர் 2025 10:30:16 AM (IST)

ரயில் பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் : அமைச்சர் கீதா ஜீவன் தகவல்
வியாழன் 18, டிசம்பர் 2025 10:15:07 AM (IST)

தூத்துக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் பணியிட மாற்றம்
புதன் 17, டிசம்பர் 2025 8:52:10 PM (IST)

சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்தவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை!
புதன் 17, டிசம்பர் 2025 8:01:14 PM (IST)

தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு
புதன் 17, டிசம்பர் 2025 7:49:57 PM (IST)

முன்னாள் அமைச்சர் சி.த செல்லப்பாண்டியன் விருப்ப மனு
புதன் 17, டிசம்பர் 2025 7:42:57 PM (IST)










