» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் புதிய கிளைகள் திறப்பு விழா
வெள்ளி 8, ஆகஸ்ட் 2025 9:03:14 PM (IST)

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் இரண்டு புதிய கிளைகள் அனந்தபூர் மற்றும் ஜலகண்டாபுரம் ஆகிய இடங்களில் இன்று திறப்பு விழா நடைபெற்றது.
தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி ஒரு தலை சிறந்த ஷெட்யூல்டு கமர்சியல் வங்கி பாரத ரிசர்வ் வங்கியின் அங்கிகாரம் பெற்றது. பங்கு சந்தைகளில் தனது பங்கினை பட்டியலிட்டதை அடுத்து தனது தொலைநோக்கு பார்வையாக மீண்டும் இந்தியா முழுவதுமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. வங்கியானது இரண்டு புதிய கிளைகள் அனந்தபூர் ஆந்திர பிரதேசம் மற்றும் ஜலகண்டாபுரம் சேலம் மாவட்டம் ஆகிய இடங்களில் ATM / CRM வசதியுடன் இன்று துவக்கியுள்ளது.
ஆந்திர பிரதேசம் அனந்தபூரில் 586வது கிளையை மாவட்ட வருவாய் அலுவலர் மலோலா காரு துவக்கி வைத்தார். சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தில் 587வது கிளையை தொழிலதிபர் ரவீந்திரன் துவக்கி வைத்தார். விழாவில் வங்கியின் மண்டல தலைவர்கள், ஊழியர்கள், அலுவலர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
புதிய கிளைகள் திறப்பு குறித்து வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி உயர் சலீ எஸ் நாயர் விளக்கியதாவது: வங்கியானது இரண்டு புதிய கிளைகள் அனந்தபூர் ஆந்திர பிரதேசம் மற்றும் ஜலகண்டாபுரம் சேலம் மாவட்டம் ஆகிய இடங்களில் ATM / CRM வசதியுடன் இன்று துவக்கியுள்ளது. மேலும் இன்னும் அதிகமான கிளைகளை இந்தியா முழுவதும் துவங்கிட திட்டமிட்டிருக்கிறது. இந்த புதிய கிளையின் துவக்க விழாவின் மகிழ்ச்சியினை வங்கியின் அனைத்து உடைமைதாரர்களுக்கும் பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன் என்றார்.

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி லிமிடெட் (TMB), ஒரு பெயர் பெற்ற பழைமையான தனியார் துறை வங்கியாகும். தூத்துக்குடியை தலைமை அலுவலகமாக கொண்டு இயங்கிவரும் இந்த வங்கி நூறு ஆண்டுகளுக்கும் மேலாக வாடிக்கையாளர் சேவையிலும் அதன் கோட்பாடுகள் மற்றும் வரைமுறைகளிலும் போற்றுதலுக்குரிய சரித்திரம் படைத்து வருவதோடு, தொடர்ந்து இலாபம் ஈட்டியும் வருகிறது. இந்த வங்கியானது, இந்தியா முழுவதிலும் 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் 587 கிளைகள் மற்றும் 12 மண்டல அலுவலகங்களை கொண்டு சுமார் 53 லட்சத்துக்கும் மேலான வாடிக்கையாளர்களுக்கு நிறைவான சேவை ஆற்றி வருகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 30 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை
வியாழன் 18, டிசம்பர் 2025 10:30:16 AM (IST)

ரயில் பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் : அமைச்சர் கீதா ஜீவன் தகவல்
வியாழன் 18, டிசம்பர் 2025 10:15:07 AM (IST)

தூத்துக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் பணியிட மாற்றம்
புதன் 17, டிசம்பர் 2025 8:52:10 PM (IST)

சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்தவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை!
புதன் 17, டிசம்பர் 2025 8:01:14 PM (IST)

தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு
புதன் 17, டிசம்பர் 2025 7:49:57 PM (IST)

முன்னாள் அமைச்சர் சி.த செல்லப்பாண்டியன் விருப்ப மனு
புதன் 17, டிசம்பர் 2025 7:42:57 PM (IST)










