» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியின் வளர்ச்சியில் புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது : பிரதமர் மோடி பேச்சு
சனி 26, ஜூலை 2025 9:59:59 PM (IST)

தூத்துக்குடியின் வளர்ச்சியில் புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி பேசினார்.
தூத்துக்குடியில் ரூ.550 கோடி மதிப்பிலான திட்டங்கள், ரூ.1,030 கோடி மதிப்பிலான ரெயில்வே திட்டங்கள் உள்பட தமிழகத்தில் ரூ.4,900 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். பின்னர் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: இன்று கார்கில் வெற்றி திருநாள். கார்கில் போரின் போது உயிர்தியாகம் செய்த வீரர்களை வணங்குகிறேன். 4 நாட்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணத்துக்கு பின்பு பகவான் ராமேஸ்வரனின் புனிதமான மண்ணில் நேரடியாக கால்பதிக்கும் பாக்கியம் கிடைத்துள்ளது.
வெளிநாட்டு பயணத்தின் போது இந்தியா-இங்கிலாந்து இடையே வரலாற்று பூர்வமான வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. இது, இந்தியா மீது உலக நாடுகள் வைத்திருக்கும் நம்பிக்கை. பகவான் ராமேஸ்வரன், திருச்செந்தூர் முருகன் நல்லாசியோடு தூத்துக்குடி வளர்ச்சி பணியில் புதிய அத்தியாயம் எழுதப்பட்டு வருகிறது.
.jpg)
தமிழ்நாட்டை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்லும் குறிக்கோள் பயணம் 2014-ம் ஆண்டு தொடங்கியது. தொடர்ந்து அதன் சாட்சியாக தூத்துக்குடி ஆகி கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் வெளிப்புற துறைமுக சரக்கு பெட்டி முனையத்துக்கு அடிக்கல் நாட்டினேன். பல நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை அப்போது தொடங்கி வைத்தேன்.
செப்டம்பர் மாதம் புதிய சர்வதேச சரக்கு பெட்டி முனையத்தை பொதுமக்களுக்கு அர்ப்பணம் செய்தேன். இன்று 4,900 கோடி மதிப்பிலான திட்டங்கள் மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. உட்கட்டமைப்பு மற்றும் எரிசக்தி ஆகியவை மாநிலத்தின் முன்னேற்றத்துக்கு முதுகெலும்பு போன்றவை. கடந்த 11 ஆண்டுகளில் உள்கட்டமைப்பு மற்றும் எரிசக்தி துறைகளின் மீது அதிக கவனம் செலுத்தி வருகிறோம்.
தமிழ்நாட்டின் வளர்ச்சி எத்தனை முக்கியமானது என்பதை இன்றைய அனைத்து திட்டங்களும் உறுதிப்படுத்தி உள்ளன. தமிழ்நாடு மற்றும் தூத்துக்குடி மக்களும் பல நூற்றாண்டுகளாக தன்னிறைவான சக்தி படைத்த இந்தியாவுக்காக தங்களுடைய பங்களிப்பை அளித்து வந்திருக்கிறார்கள்.
வ.உ.சி.-பாரதியாருக்கு புகழாரம்
இதேமண்ணில்தான் வ.உ.சிதம்பரம் பிள்ளை போன்ற தொலைநோக்காளர்கள் தோன்றினார்கள். அடிமைப்பட்டிருந்த காலத்திலே கூட கடல்வழி வாணிபத்தின் சக்தியை புரிந்து கொண்டவர் அவர். ஆழ்கடல்களின் மீது சுதேசி கப்பலை செலுத்தி ஆங்கிலேயர்களுக்கு சவால் விட்டவர் வ.உ.சிதம்பரம் பிள்ளை. இந்த மண்ணில் தான் வீரபாண்டிய கட்டபொம்மன், அழகுமுத்து கோன் போன்ற மாமனிதர்கள் சுதந்திரமான வல்லமைமிகு பாரதம் படைக்கும் கனவை காண செய்தார்கள்.
சுப்பிரமணிய பாரதி போன்ற தேசிய கவியும் கூட தூத்துக்குடி அருகே தான் பிறந்திருக்கிறார் என்பதை நீங்கள் அனைவரும் நன்கு அறிவீர்கள். சுப்பிரமணிய பாரதிக்கு எத்தனை பலமான உறவு தூத்துக்குடிக்கு இருக்கிறதோ அதே அளவு பலமான உறவு என்னுடைய நாடாளுமன்ற தொகுதியான காசியோடும் இருக்கிறது. காசி தமிழ் சங்கமம் போன்ற ஏற்பாடுகள் மூலம் நமது கலாசாரம் மரபுகளை தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறோம்.
தூத்துக்குடி முத்து
கடந்த ஆண்டு தூத்துக்குடியின் பிரபலமான முத்துக்களை பில்கேட்சுக்கு பரிசாக அளித்தது எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது. அவருக்கு அந்த நல்முத்துக்கள் மிகவும் பிடித்திருந்தது. நமது பாண்டிநாட்டு முத்துக்கள் ஒருகாலத்தின் உலகம் முழுவதும் பாரதத்தின் பொருளாதார வல்லமையின் அடையாளமாக இருந்து வந்தது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். தமிழில் வணக்கம் முன்னதாக பிரதமர் மோடி தனது பேச்சின் தொடக்கத்தில், தமிழில் அனைவருக்கும் வணக்கம் தெரிவித்தார்.

புதிய பொருளாதார திட்டத்தின் மூலம் இந்தியா உலகின் 3-வது மிகப்பெரிய பொருளாதாரமாக மாறும். இங்கிலாந்துடன் இந்தியா மேற்கொண்டுள்ள தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் தமிழகத்திற்கு உத்வேகம் அளிக்கும். தடையில்லா வர்த்தகத்தால் இங்கிலாந்தில் விற்கப்படும் இந்திய பொருட்களுக்கு வரி கிடையாது. தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தால் இந்தியாவில் சிறு, குறு தொழில்துறையினர் நன்மையடைவார்கள்.
உள்கட்டமைப்பு, எரிசக்தி ஆகியவை மாநிலத்தின் முன்னேற்றத்திற்கு முதுகெலும்பாக திகழ்கின்றன. தமிழ்நாட்டின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. சக்திவாய்ந்த இந்தியாவிற்கு தூத்துக்குடியின் பங்களிப்பு அதிகம். இந்தியாவின் வளர்ச்சியில் உலகம் வளர்ச்சியை காண்கிறது." என்றார்.
Tamil Nadu is witnessing unprecedented development. This growth reflects the Centre’s resolve to make the state a driving force of Viksit Bharat. Watch from Thoothukudi. https://t.co/BMsDFFF25e
— Narendra Modi (@narendramodi) July 26, 2025
தூத்துக்குடி விமான நிலைய திறப்பு விழாவிற்காக அமைக்கப்பட்டிருந்த விழா அரங்கில் பாஜக தொண்டர்கள் மட்டுமன்றி திமுக தொண்டர்களும் ஏராளமானோர் குவிந்திருந்தனர். விழா தொடங்கும் முன்பாக பாஜக தொண்டர்கள் தங்கள் கட்சிக்கொடி நிறத்திலான துண்டை சுழற்றிக்கொண்டு மோடி மோடி என உற்சாகமாக குரல் எழுப்ப, பதிலுக்கு திமுகவினர் தங்கள் கட்சிக்கொடி நிறத்திலான துண்டை சுழற்றி ஸ்டாலின், உதயநிதி என உரக்கக் கத்தினர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் சென்று சமாதானப்படுத்தினர்.
மக்கள் கருத்து
IndianJul 27, 2025 - 12:03:33 PM | Posted IP 104.2*****
video release seems to be good.
IndianJul 27, 2025 - 12:02:30 PM | Posted IP 104.2*****
True
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 30 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை
வியாழன் 18, டிசம்பர் 2025 10:30:16 AM (IST)

ரயில் பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் : அமைச்சர் கீதா ஜீவன் தகவல்
வியாழன் 18, டிசம்பர் 2025 10:15:07 AM (IST)

தூத்துக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் பணியிட மாற்றம்
புதன் 17, டிசம்பர் 2025 8:52:10 PM (IST)

சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்தவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை!
புதன் 17, டிசம்பர் 2025 8:01:14 PM (IST)

தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு
புதன் 17, டிசம்பர் 2025 7:49:57 PM (IST)

முன்னாள் அமைச்சர் சி.த செல்லப்பாண்டியன் விருப்ப மனு
புதன் 17, டிசம்பர் 2025 7:42:57 PM (IST)











ஓட்டு போட்ட முட்டாள்Jul 27, 2025 - 08:53:13 PM | Posted IP 172.7*****