» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் புதுப்பிக்கப்பட்ட விமான நிலையம்: 26-ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்
ஞாயிறு 20, ஜூலை 2025 9:52:54 AM (IST)

தூத்துக்குடியில் புதுப்பிக்கப்பட்ட விமான நிலையத்தை பிரதமர் மோடி வருகிற 26-ஆம் தேதி திறந்து வைக்கிறார்.
தென்னகத்தின் தொழில்நகரமாக உருவாகி உள்ள தூத்துக்குடியில், 1992-ம் ஆண்டு விமான நிலையம் திறக்கப்பட்டு, ஏப்ரல் மாதம் 13-ம் தேதி தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு முதல் முறையாக வாயுதூத் விமானம் பறந்தது. தற்போது 2 தனியார் விமான நிறுவனங்கள் மூலம் சென்னை மற்றும் பெங்களூருக்கு 9 விமான சேவைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
இதனை மக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருவதால், விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கு நிலம் கையகப்படுத்தப்பட்டு ரூ.381 கோடி செலவில் விரிவாக்க பணிகள் மேற்காள்ளப்பட்டன. இதில் 1,350 மீட்டர் விமான ஓடுதளம் 3 ஆயிரம் மீட்டர் நீள ஓடுதளமாக மாற்றப்பட்டது. இதில் ஒரே நேரத்தில் 5 விமானங்களை நிறுத்தும் வகையிலும், பல்வேறு வசதிகளுடனும் புதுப்பிக்கப்பட்டு உள்ளது.
இந்த விரிவாக்கப் பணிகள் முடிக்கப்பட்டு திறப்பு விழாவுக்கு தயாராக உள்ளது. இந்நிலையில், வருகிற 26-ம் தேதி பிரதமர் மோடி, தூத்துக்குடி புதிய விமான நிலையத்தை திறந்து வைக்க உள்ளார். பிரதமர் வருகையையொட்டி தூத்துக்குடியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
மக்கள் கருத்து
Anthony Raj RJul 24, 2025 - 03:23:13 AM | Posted IP 162.1*****
வள்ளியூர் திருச்செந்தூர் சாலை விஞ் கிடப்பில் போடப்பட்டு பல வருடங்கள் ஆகிறது? தூத்துக்குடி கன்னியாகுமரி கிழக்கு கிழக்கு கடற்கரை சாலை என்னாச்சு? தென் மாவட்டத்தை புறக்கணிக்கும் மத்திய மாநில அரசுகள்? அனல் மின் நிலையம் அணு மின் நிலையம் ராக்கெட் ஏவுதளம் இதற்கு மட்டும் தென் மாவட்ட மக்களின் நிலங்களை அழிக்க வேண்டும் ?? அவர்களுக்கு தேவையான உள் கட்டமைப்பை செய்து கொடுக்க மனமில்லை? கடும் கண்டனத்துக்குரியது...
inbaJul 22, 2025 - 07:59:01 AM | Posted IP 172.7*****
super
மேலும் தொடரும் செய்திகள்

எல்லோருக்கும் எல்லாம் என்பதே திராவிட மாடல் ஆட்சியின் நோக்கம்: அமைச்சர் கீதா ஜீவன்
திங்கள் 9, மார்ச் 2026 10:26:43 AM (IST)

கட்டுமானப் பணியின் போது தவறி விழுந்தவர் உயிரிழப்பு!
திங்கள் 9, மார்ச் 2026 8:15:19 AM (IST)

வேன் மோதி பெண் தலைமைக் காவலர் காயம்!
திங்கள் 9, மார்ச் 2026 8:13:07 AM (IST)

மதிமுக மாநில நிர்வாகி அதிமுகவில் இணைந்தார்
திங்கள் 9, மார்ச் 2026 8:00:44 AM (IST)

சட்டவிரோதமாக வெடிபொருட்கள் பதுக்கல்: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!
ஞாயிறு 8, மார்ச் 2026 9:44:39 PM (IST)

தூத்துக்குடியில் ஒரே நாளில் 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது!
ஞாயிறு 8, மார்ச் 2026 9:41:54 PM (IST)








MvmmuruganJul 24, 2025 - 02:39:37 PM | Posted IP 172.7*****