» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ரோட்டரி கிளப் ஆப் பேர்ல்சிட்டி நிர்வாகக் குழு பாெறுப்பேற்பு விழா
செவ்வாய் 15, ஜூலை 2025 8:43:01 PM (IST)

தூத்துக்குடியில் ரோட்டரி கிளப் ஆப் பேர்ல்சிட்டியின் 32வது தலைவர், செயலாளர் மற்றும் நிர்வாகக் குழு பொறுப்பேற்பு விழா நடைபெற்றது.
தூத்துக்குடி சத்யா ரிசார்ட்ஸில் நடைபெற்ற இவ்விழாவில், சங்கத்தின் புதிய தலைவராக விக்டர், செயலாளராக கிருஷ்ணசாமி மற்றும் நிர்வாக குழுவினர் பொறுப்பேற்றனர். ரோட்டரி மாவட்ட ஆளுநர் தேர்வு காந்தி புதிய தலைவர் மற்றும் செயலாளருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இவ்விழாவில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் மற்றும் சத்யா குழுமங்களின் தலைவர் ஜான்சன் கலந்து கொண்டனர்.
ரோட்டரி மாவட்ட ஆளுநர் தேர்வு காந்தி கிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். கௌரவ விருந்தினர் மயில் பாலசுப்பிரமணியம், உதவி ஆளுநர் பரமேஸ்வரன் வாழ்த்தி பேசினார்கள். நிகழ்ச்சியில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டன. மாநகராட்சி மேயர் ஜெகன் சங்கத்தின் கௌரவ உறுப்பினராக இணைக்கப்பட்டார். வீ கேன் டிரஸ்ட், ஜெயின்ட்ஸ், அறம் சார் அறக்கட்டளை ஆகிய சேவை நிறுவனங்கள் கௌரவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சங்கத்தின் உறுப்பினர்கள் அவர்களது குடும்பத்தினர் மற்றும் தூத்துக்குடியில் உள்ள பல்வேறு சங்கத்தினர், தொழிலதிபர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை உடனடி முன்னாள் தலைவர் முனைவர் விக்னேஷ் மற்றும் உறுப்பினர்களும் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பட்டினமருதூரில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மாணவர்கள் கள ஆய்வு!
வியாழன் 18, டிசம்பர் 2025 3:30:06 PM (IST)

பிரதமர் மோடி பதவி விலக கோரி காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!
வியாழன் 18, டிசம்பர் 2025 3:09:24 PM (IST)

பைக் மீது கார் மோதியதில் எலெக்ட்ரிசியன் பலி: தூத்துக்குடியில் பரிதாபம்!!
வியாழன் 18, டிசம்பர் 2025 11:39:17 AM (IST)

தூத்துக்குடியில் ரூ.1 கோடி கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது - மேலும் மூவருக்கு வலைவீச்சு!
வியாழன் 18, டிசம்பர் 2025 11:26:04 AM (IST)

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 30 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை
வியாழன் 18, டிசம்பர் 2025 10:30:16 AM (IST)

ரயில் பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் : அமைச்சர் கீதா ஜீவன் தகவல்
வியாழன் 18, டிசம்பர் 2025 10:15:07 AM (IST)










