» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோவில்பட்டியில் மாரத்தான் போட்டி: தூத்துக்குடி கல்லூரி மாணவர் முதலிடம்!

செவ்வாய் 15, ஜூலை 2025 3:27:28 PM (IST)



கோவில்பட்டியில் எஸ்.எஸ்.டி.எம்., கல்லூரி சார்பில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு நடந்த மாரத்தான் போட்டியில் தூத்துக்குடி காமராஜ் கல்லூரி மாணவர் முதல் பரிசை வென்றார். 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி எஸ்.எஸ் துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கல்லூரி உடற்கல்வியில் துறை சார்பில் காமராஜரின் 123வது பிறந்த தினத்தை முன்னிட்டு காமராஜர் சிலை முன்பு துவங்கி மாதாங் கோவில் ரோடு, எட்டையாபுரம் ரோடு, புது ரோடு, மெயின் ரோடு வழியாக கல்லூரி வரையில் 5 கிலோ மீட்டர் தூரம் மாரத்தான் போட்டி நடந்தது. 

இந்நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கத் தலைவர் ஆர்.எஸ் ரமேஷ் தலைமை வகித்தார். சங்க துணைத் தலைவர் செல்வராஜ்,செயலாளர் ஜெயபாலன், பொருளாளர் சுரேஷ் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி செயலாளர் கண்ணன் அனைவரையும் வரவேற்றார். மாரத்தான் போட்டியை கோவில்பட்டி துணை காவல் கண்காணிப்பாளர் ஜெகநாதன் கொடியசைத்து துவக்கி வைத்தார். 

இதில், தூத்துக்குடி, கோயம்புத்தூர், பொள்ளாச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தூத்துக்குடி காமராஜ் கல்லூரி மாணவர் கருத்தபாண்டிக்கு முதலிடம் பிடித்து ரூ.5000 ரொக்க பரிசு வென்றார். பொள்ளாச்சி எஸ்.டி.சி கல்லூரி மாணவர் கனிராஜ் 2வது இடமும், பொள்ளாச்சி என்.ஜி.பி கல்லூரி மாணவர் கபிலன் 3ம் இடமும் பிடித்தனர். 

பின்னர் கல்லூரியில் நடந்த பரிசளிப்பு விழாவில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் மாரியப்பன் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுத் தொகை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். 4 முதல் 10 இடம் பெற்றவர்களுக்கு ரொக்கப் பரிசு ரூ.500 மற்றும் சான்றிதழும்,கலந்து கொண்ட 70 வயது முதியவர் கண்ணன், 65 வயது முதியவர் கிருபானந்தம் ஆகியோருக்கு சிறப்பு பரிசாக ரொக்கம் 500ம் சான்றிதழும் வழங்கப்பட்டது.

இதில் கல்லூரி உறுப்பினர் அருண், சரவணகுமார் முதல்வர் செல்வராஜ், ஐ.சி.எம் நடுநிலைப்பள்ளி பொருளாளர் ராஜா அமரேந்திரன், உறுப்பினர் தாயப்பன், உடற் கல்வியில் துறை பேராசிரியர்கள் ரமேஷ் பாண்டியன், சிவா, வெங்கடேஷ்,உள்பட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக கல்லூரி உடற்கல்விவியல் துறை தலைவர் செல்லத்துரை நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital

CSC Computer Education



Thoothukudi Business Directory